Thursday, September 29, 2011

முதுமையில் மூளைதிறனை அதிகரிக்க


பல ஆராய்ச்சிகளின் படி முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாகத் தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைத் இங்கு பார்ப்போம்.
1) உணவுப் பழக்கங்கள்:
உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.
2) உடற்பயிற்சி:
தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
3) புதிய முயற்சிகள்:
எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4) ஓய்வு:
சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
5) மூளைக்கு வேலை:
மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
6) படித்தல்:
புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.
7) நல்ல பழக்க வழக்கங்கள்:
புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.
8) மற்றவை:
அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.
மேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும்மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக!

குழந்தை வளர்ப்பு

 குழந்தைகள் பார்த்தல், கேட்டல் முறைகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. தொடுதல், வாசனை, சுவை ஆகியவற்றுடன் புலன் சம்பந்தப் பட்டவைகளை கற்றுக்கொள்கிறது.

ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்


ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

Wednesday, September 28, 2011

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்


வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்


கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.
முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.
2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.
3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.
4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.
6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.
8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.
11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.
12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.
15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

வெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்


வெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்

மனிதனோட மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது வெங்காயம்.
ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால் பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக உட்கொண்டார்கள். ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைத்து உடம்பில் பூசி கொள்வார்கள்.
இதற்கு உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை தான் காரணம். வெயிலில் அலைந்து, வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ளேயே வந்ததும் சிலருக்கு நீர்ச்சுருக்கு வந்துவிடும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லையா? அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுங்கள். சில நிமிடங்களில் நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் கட்டிகளுக்கு வெங்காயம் மூலம் நிவாரணம் பெறலாம்.
வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து புண் உள்ள இடங்களில் தடவி வந்தால் கொப்புளம் உடைந்து சீழும், கிருமிகளும் வெளியேறும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு தணியும்.

Sunday, September 25, 2011

டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்


டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.
சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது.
எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.
வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.
டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.
டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.
உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.

மிக அழகான மேனியை பெறுவதற்கு


மிக அழகான மேனியை பெறுவதற்கு:
மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது அரிது. தங்களது தோலை பாதுகாக்க என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.
தங்களது தோலில் சிறிய சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோபோச்சே என கவலை கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.
தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய அதிகமாக தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல்சுருக்கம் மறைந்து விடுவதோடு தோலுக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கின்றது. எனவே இளமையாக தோன்றலாம்.
இதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.
வில்லோ நீர் என்பது-இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் மினரல் வாட்டராகும்.
தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத் தான் பயன்படுத்துகின்றனர். அதாவது செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தபடும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால் தான் தோல்சுருக்கம் காணமல் போகிறது.
இதில் கலந்துகொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பிறகும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு பிறகு எடுக்கபட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர். சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.
எது எப்படியோ ஆக மொத்தத்தில் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும்.

ஆரோக்கியத்துக்கும் நல்ல தோற்றத்துக்கும் காரட் சாப்பிடுங்கள்


ஆரோக்கியத்துக்கும் நல்ல தோற்றத்துக்கும் காரட் சாப்பிடுங்கள்

பிரிட்டனின் பிரிஸ்டால் பல்கலை கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் மனிதர்களின் தோல் நிறத்திற்கும் அவர்கள் தோற்றத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நல்ல மஞ்சள் நிறமாக இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'கேராடெனாய்டுகள்' அடங்கிய பழங்கள், காய்கறிகள் குறிப்பாக கேரட்டுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். நல்ல பலன் தர சுமார் இரண்டு மாதங்களாகலாம் என மேலும் கூறப்படுகிறது. மேலும், இருதய நோய் வருவதையும் இது தவிர்க்குமாம்.





LYŸop R£• ÚLWy
LYŸopVÖ] ÚRL• ÙT\ G¥ÚXÖ£eh• BÛN C£eh•. EjLºeh• A‹R BÛN C£ef\RÖ? ATzVÖ]Ö¥ ÚLWy N֐‘|jL· GÁf\ÖŸL· BšYÖ[ŸL·.

‘¡yPÂÁ ‘¡ÍPÖ¥ T¥LÛXeLZL «tOÖÂL· SP†‡V Bš° JÁ½¥ UÂRŸL¸Á ÚRÖ¥ Œ\†‡¼h•, AYŸL[‰ ÚRÖ¼\†‡¼h• E·[ ÙS£jfV ÙRÖPŸ“ Œ¤‘eLTy|·[‰.

ÙTÖ‰YÖL S¥X UtN· Œ\UÖL C£TYŸL· BÚWÖefVUÖL°• S¥X ÚRÖ¼\†‰PÄ• C£TRÖL AYŸL· L|‘z†‰·[]Ÿ. CR¼h `ÚLWÖÙP]Öš|L·` APjfV TZjL·, LÖšL½L· h½TÖL ÚLWy|L· BfVY¼Û\ A‡L• ÚNŸ†‰eÙLÖ·[ ÚY|• G] AYŸL· A½°¿†‰fÁ\]Ÿ.

S¥X TXÁ fÛPeL rUÖŸ CW| UÖRjL[ÖLXÖ• GÁ¿•, CRV ÚSÖš Y£YÛR C‰ R«Ÿeh• GÁ¿• Bš«¥ ÚU¨• Œ¤‘eLTy|·[‰.

முக அழகிற்கு உதவும் எலுமிச்சை


அழகிய கன்னங்களை பெறுவதற்கு
பெரும்பாலும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய்,வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல் போன்றவற்றை உணவோடு அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நன்று.
கீரைகள், பருப்பு போன்றவற்றை அதிகம் சோ்த்து கொள்ள வேண்டும். மேலும் தேவையில்லாமல் கவலைப்படமல் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும். இப்படி சரியாக செய்துவந்தால் ஒட்டிய உங்களது கன்னம் குண்டாக மாறிவிடும்.

முக அழகிற்கு உதவும் எலுமிச்சை
எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ஒரு தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சா‌ரி‌ல் ‌சி‌றிது தென் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் வழவழப்பாக இருக்கும்.
எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு அல்லது தயிரை முக‌த்‌தி‌ல் கருமை படர்ந்த இட‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கவு‌ம். உலர்ந்த பிறகு கழு‌வினா‌ல் கருமை மாறு‌ம்.
எலு‌மி‌ச்சை சாறுட‌ன் ‌வி‌னிகரையு‌ம் சே‌ர்‌த்து உட‌லி‌ல் கறு‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ‌நிற‌ம் மா‌ற்ற‌ம் தெ‌ரியு‌ம்.
எலு‌மி‌ச்சை சாறை உண‌வி‌ல் ‌தினமு‌ம் சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் முக‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.
எலு‌மி‌ச்சை சாறு பிழி‌ந்த ‌பிறகு அத‌ன் தோலை தூ‌க்‌கி எ‌றியாம‌ல், எலு‌மி‌ச்சை தோலை‌கை, கா‌ல் ‌விர‌ல் நக‌ங்களை ந‌ன்கு தே‌ய்‌த்து ‌வி‌ட்டா‌ல் நக‌ங்க‌ளி‌ல் படி‌ந்‌திரு‌ந்த அழு‌க்குக‌ள் வெ‌ளியே‌றி நக‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று மாறு‌ம்.

இதய நோய்களை தடுக்கும் ஆலிவ்


இதய நோய்களை தடுக்கும் ஆலிவ்
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது.
மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை.
அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.
இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும்.
கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.
ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.
திரவத் தங்கம்: ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.
கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.
வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.
தோலினை மினுமினுப்பாக்கும்: இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.
100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.
குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.
ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும்.
ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்: தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில் மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.
இதயநோயை தடுக்கும்: இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான்(Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.
ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.