| 10 நிமிடத்தில் பல்வலி தீர |
பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்.
காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்
|
Tuesday, April 16, 2013
10 நிமிடத்தில் பல்வலி தீர
Saturday, April 6, 2013
தொப்பையை குறைக்க
* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
-நலம், நலம் அறிய ஆவல்.
Tuesday, April 2, 2013
தர்பூசணி பழம்
தர்பூசணி கோடைக்கு ஏற்ற , கோடையில் மட்டுமே கிடைக்ககூடிய பழம். தண்ணீர்ச் சத்து அதிகமுள்ளதால், ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என
அழைக்கப்படும் தர்பூசணிக்கு, கோடை காலம் தான் சீசன். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு.
வெயிலுக்கு ஏற்ற பழமான தர்பூசணிக்கு, சிறப்பான மருத்துவ குணங்களும் உள்ளன. இருதயத்தை பலப்படுத்தவும், ரத்தக் குழாய்களில் உள்ள தீமை செய்யும் கொழுப்புப் படலத்தை நீக்கவும், தர்பூசணியில் உள்ள சிறப்பு வேதிப் பொருள் பயன்படுகிறது.
வெயில் காலத்தில் நீர் அதிகமாக அருந்துவதால், பலருக்கு பசி இருக்காது. பசியின்மை ஏற்படும். சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
இந்த போலியான பசியின்மையை நீக்கி , பசியைத் தூண்டும் இயல்பு தர்பூசணிக்கு உள்ளது. மருத்துவப் பழங்களுள் ஒன்றாக ஆகி விட்ட தர்பூசணியை தாராளமாய் சாப்பிடுவோம்.
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)