| இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்! |
| காளான் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மருத்துவ பயன்கள்
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும்.
வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
|
Friday, November 27, 2015
இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்!
Friday, November 6, 2015
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவை
மருத்துவர்களே ஆச்சரியப்படும் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையின் பயன்கள்!
எப்போதும் மருத்துவர்கள் தான் புதிய மருந்துகளை கண்டுபிடித்து நோயாளிகளை ஆச்சரியப் படுத்துவார்கள். ஆனால், இந்த முறை தேன் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றின் கலவையால் ஏற்படும் பயன்களை கண்டு மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் இருக்கிறார்கள்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டையில் இருக்கும் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், இவை பல உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த பயனளிக்கிறது என்றும் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆயிரம் வருடங்களாக எகிப்து பகுதிகளில் இவற்றை அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். மற்றும் நமது இந்திய பாரம்பரியத்தில் இவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்நாளுடன் இருப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதை இப்போது மாடர்ன் மருத்துவமும் ஒப்புக்கொண்டுள்ளது....
ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கால் ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து உட்கொண்டு வந்தால் சளி, கபம், இருமல் போன்றவற்றுக்கு தீர்வுக் காண முடியும்.
இரண்டு ஸ்பூன் தேனுடன், மூன்று ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு இரண்டு மணி நேரத்தில் 10% குறையுமாம்.
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரி செய்ய தினமும் இந்த தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையை உட்கொண்டு வாருங்கள் . இது இயற்கையாகவே நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.Thursday, November 5, 2015
கால் பாதங்களால் காய்ச்சலை குணப்படுத்தலாம்!
| கால் பாதங்களால் காய்ச்சலை குணப்படுத்தலாம்! |
மழைக்காலம் என்றாலே கூடவே காய்ச்சலும் வந்து விடும். இதனால் தொடர் இருமல், மூக்கு சிவந்துபோய் மூக்கு ஒழுகும் கூடவே உடல் வெப்பமும் அதிகரித்து காணப்படும்.
இப்போது கடைகளில் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகள் அதிக அளவில் மிக எளிதாக கிடைக்கின்றன.
கடைகளில் பரவலாக கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளை ஒரு முறை நாம் சோதனை செய்வதில் தவறில்லை.
வெங்காயமும் கால் பாதங்களும் காய்ச்சலையும் அது தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தும் என கூறுவது வேடிக்கையாக இருக்கலாம்.
கால் பாதங்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. பாதங்களில் இருந்து பெறப்படும் செய்திகளை மூளை உள்வாங்கிக்கொண்டு உடனுக்குடன் நமது உடலை அது சரிசெய்து கொள்கிறது.
கால் பாதங்களுக்கடியில் வெங்காயம் வைத்து கட்டு போடுவது என்பது காய்ச்சல் மற்றும் அது தொடர்பான நோய்களை கட்டுப்படுத்துவதில் உடனடி நிவாரணம் தரக்கூடியதாகும்.
இதுபோன்று கட்டுப்போடுவது 6 மாதங்களுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு உடனடியான நிவாரணம் தரக்கூடியதாகும்.
|
காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?
| காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா? |
இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அடங்கியுள்ள சத்துக்கள்
பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் கே, விட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.
வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.
உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.
இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.
சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
flavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.
பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.
முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
காராமணி சாதம்
வானலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும்.
2. குக்கரில் அரிசி, காராமணி, புளி தண்ணீர் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
3. தக்காளி நன்கு மசிந்தவுடன், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி, குக்கரில் சேர்க்கவும்.
4. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான காராமணி சாதம் தயார்.
பயன்கள்
நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.
இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
|
Subscribe to:
Comments (Atom)