Sunday, October 27, 2013

மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்

மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்

உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்று தான் மஞ்சள்.
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன.
உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.
அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
மஞ்சள் பால் செய்முறை:
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.
சுவாசக் கோளாறு
மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும்.
இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.
அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
புற்றுநோய்
மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால் இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.
தூக்கமின்மை
வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.
ஜலதோஷம் மற்றும் இருமல்
மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம் அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
கீல்வாதம்
மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.
மேலும் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
மஞ்சள் பால் ஆயூர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது.
இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.
மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது.
கல்லீரல் நச்சு நீக்கி
மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது.
இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால் இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.
எலும்பு சுகாதாரம்
மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.
செரிமான நலம்
இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.
எடை குறைப்பு
மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
எக்ஸிமா/சிரங்கு
எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.

Tuesday, October 15, 2013

கருப்பு மிளகின் மகத்துவங்கள்

கருப்பு மிளகின் மகத்துவங்கள்

உணவில் காரசாரத்தை சேர்க்கவும், கூடுதல் சுவையை உண்டாக்கவும் கருப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம்.
பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும், சில பெரியவர்களுக்கும் அப்படி தான்.
புற்றுநோயை தடுக்கும்
மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது என்று மிஷிகன் கேன்சர் மைய பல்கலைகழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளது.
மேலும் இதனை மஞ்சளுடன் கலக்கும் போது, அதன் புற்று எதிர்ப்பு குணங்கள் இன்னமும் அதிகரிக்கும்.
பப்பெரைன்னை தவிர கருப்பு மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ப்ளேவோனாய்டுகள், கரோடீன்கள் மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது.
இவைகள் தீமையை விளைவிக்கும் இயக்க உறுப்புகளை நீக்கி, உடலை புற்றுநோய் மற்றும் இதர நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
சரும புற்று மற்றும் குடல் புற்று வளர்வதை தடுப்பதிலும் கூட இது பெரிதும் உதவுகிறது என்று வேறு சில ஆய்வுகள் கூறுகிறது.
எனவே உணவுகளில் தினமும் ஒரு டீஸ்பூன் மிளகு பொடியை சேர்த்திடுங்கள். சமைக்கும் போது அதனை உணவில் சேர்ப்பதை விட, அதை அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.
செரிமானத்திற்கு உதவும்
கருப்பு மிளகில் உள்ள பப்பெரைன் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும். வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகமாக சுரக்க தூண்டுகோலாக விளங்குகிறது கருப்பு மிளகு.
இந்த அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவுகள் செரிமானமாக உதவும். இந்த உணவு வகைகள் சரிவர செரிமானமாகாமல் போனால் வயிற்றுப் பொருமல், செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும்.
அதிகப்படியாக உற்பத்தியாகும் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கும். செரிமானத்தை சீராக்க, சமைக்கும் போது உணவில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். அது சுவையை கூட்டுவதுடன், வயிற்றையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உடல் எடை குறைய உதவும்
கருப்பு மிளகு உணவை செரிக்க(ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல்) வைப்பதிலும் பெரிதும் உதவும். மேலும் அதன் வெளிப்புறத்தில் உள்ள ஆற்றல் மிக்க பைட்டோ-நியூட்ரியன்ட் ஊக்கி கொழுப்பு அணுக்களை உடைத்தெறியும்.
இது வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க உதவும். இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுவதால், உடலில் இருந்து நச்சுப் பொருட்களும் வெளியேறும். இவையனைத்தும் கூட்டாக சேர்ந்து, உடல் எடை குறைய துணை புரியும்.
ஆகவே உடல் எடை குறைய தினமும் உண்ணும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி கொள்ளுங்கள். அதிகப்படியாக அதை சேர்க்கக்கூடாது. அது வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
வாயு பிரச்சனை நீங்கும்
வாயு உருவாகுவதை தடுக்கும் பொருளான கார்மிநேடிவ் கருப்பு மிளகில் உள்ளதால் வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
எனவே உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகை சேர்த்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
சருமத்தை தூய்மையாக்கும்
உடலில் இருந்து வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற கருப்பு மிளகு உதவுவதோடு நிற்காமல், அழுக்கு நீக்கியாகவும் உதவுகிறது.
மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும்.
மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
அடைத்த மூக்கை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்
கருப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அது பெரிதும் உதவும். கதகதப்புடன் காரசாரமாக இருப்பதால், சளியை நீக்கி அடைபட்டிருக்கும் மூக்கிற்கு நிவாரணியாக விளங்கும்.
அதற்கு அரைத்த மிளகை ரசம் அல்லது சூப்பில் சேர்த்து குடியுங்கள். இது உடனடியாக சளியை நீக்கி சுலபமாக மூச்சு விட செய்யும்.
பசியின்மையை போக்கும்
கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி சுவை அரும்புகளை ஊக்குவிப்பதை அறிவோம். இந்த குணத்தால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு ஒரு இயற்கை மருந்தாக விளங்குகிறது.
உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் போதும். அது பசியின்மை பிரச்சனையை நீக்கும்.
ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்த உதவும்
உடலில் உள்ள மருந்து இருப்பை அதிகரிக்க கருப்பு மிளகின் குணங்கள் உதவுகிறது. அப்படியென்றால் உணவில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களை உடலில் சரியாக பயணிக்க செய்து ஈர்த்துக் கொள்ள உதவும்.
இந்த குணம் மருந்து சரியாக வேலை செய்யவும் துணை நிற்கும்.

Saturday, October 12, 2013

50 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்

வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6. வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Friday, October 11, 2013

உடல் எடையை குறைக்கும் தயிர் - எப்படி?

உடல் எடையை குறைக்கும் தயிர் - எப்படி?


தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.

தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.

மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.

இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கையில், குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் பருமான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்து கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22 சதவிகித அளவுக்கு உடல் எடை குறைந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளித்தனர்.

Monday, October 7, 2013

அழகான கன்னங்கள் வேண்டுமா?

அழகான கன்னங்கள் வேண்டுமா?

உடல் எடையை குறைக்க முயலும் போது தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம்.
ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
சொல்லப்போனால் இத்தகைய கன்னங்கள் ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற பழக்கங்களான குடிப்பழக்கம், போதிய தூக்கமின்மை, புகைப்பிடித்தல் மற்றும் நொறுக்குத்தீனிகள் அதிகம் உட்கொள்வது போன்றவை காரணங்களாகின்றன.
மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உடலுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடையை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஆகவே கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின்பற்றி வந்தால் நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம்.
அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் உதவும்.
வாயை குவிக்கவும்
கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல்.
அவ்வாறு உதடுகளை இறுக்கமாக மூடி 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.
சிரிப்பு
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.
கன்னங்களை தூக்குதல்
நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.
மீன் போன்ற உதடு
படத்தில் காட்டியவாறு மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம்.
வாயில் காற்றை நிரப்புங்கள்
படத்தில் காட்டிய படி வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு சரியான அளவில் இருக்கும்.