| அசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு? |
| உணவு செரிமானவது முதலில் வாயில் தொடங்குகிறது.
உங்கள் உமிழ்நீர், செரிமான சக்தி மிக்கது. செரிமான வேலை முதலில் இந்த நீர் மூலம்தான் வாயில் தொடங்குகிறது.
உங்கள் வயிறு ஒரு தடிமனான பை. அதன் உள்ளே நீங்கள் உண்ட உணவு, மற்றும் வயிற்றின் நீர்கள் கலக்கப்பட்டு, கடையப்படுகிறது.
உங்கள் கல்லீரல் ஒரு "ரசாயான தொழிற்சாலை' அது விட்ட மின்களை சேகரிக்கிறது.
உங்கள் வயிறை விட்டு வெளியே வந்த உணவு, சிறுகுடலில் செல்கிறது. உணவின் நல்ல சத்துக்கள், அதன் மெல்லிய சுவர் வழியே ஊடுருவி ரத்ததில் கலக்கிறது.
உங்கள் உடலால் செரிமானம் செய்ய முடியாத உணவை பெருங்குடல் வைத்து கொள்ளும். பின்னர் அது உங்கள் உடலிலிருந்து மலக்குடல் மூலம் வெளியேற்றப்படுகிறது.
மேலும், பித்தநீர்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. அது நிரம்பியவுடன் கழிவாக வெளியேற என்கிற உந்துதல் உங்களிடம் ஏற்படுகிறது.
செரிமானம் ஆக எவ்வளவு நேரம்?
உணவுகளை பொறுத்து செரிமான நேரங்கள் மாறுபடும், உதாரணத்திற்கு நீர்ச்சத்து உணவுகள் என்றால் விரைவில் செரிமானம் அடைந்துவிடும்.
அசைவ உணவுகள் என்றால் அதிக நேரம் எடுத்துகொள்ளும்.
அசைவ உணவுகள்
* மீன் - அரை மணி நேரம்
* முட்டை - 45 நிமிடங்கள்
* கோழி - 2 மணி நேரம்
* வான் கோழி - இரண்டரை மணி நேரம்
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்
காய்கறிகள் மற்றும் பழங்கள்
நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்
* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்
* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்
* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்
* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்
* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்
* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்
|
Monday, February 29, 2016
அசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு?
இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!
| இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்! |
ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.
குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.
ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.
கருப்பு எள்ளு
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.
ஆப்பிள்
ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் மாலை நேரத்தில் தீனிகள் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
பீட்ரூட்
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நெல்லிக்காய்
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
மாதுளை
மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.
|
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா?
| உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா? |
பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை.
முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன.
Solanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தருபவை.
பூச்சிக் கொல்லிகளாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும்போது எத்தகைய விளைவுகள் ஏற்படும்.
சாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத்தன்மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது.
குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது.
உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அடுத்ததாக பச்சை நிறத் திட்டுகள் உள்ள உருளைக்கிழங்குகளையும் மேல்தோல் சுருங்கி உள்ளவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன.
கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்காமல் அழித்துவிடுவதே சிறந்தது.
நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
|
Thursday, February 25, 2016
நார்த்தங்காய் ஊறுகாய்
| நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! |
| [ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2016, 02:20.23 பி.ப GMT ] |
நாரத்தங்காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும்.
இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்தி வரவும். இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.
கனிகளில் அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது.
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
வாதம், குன்மவயிற்றுப் புண், வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
நார்த்தை பழத்தை சாறு பிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் தணிக்கும்.
நார்த்தங்காய் இலைகளை நரம்பு நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
சாப்பிட்டதும் ஏப்பம் வந்து கொண்டிருந்தாலும், ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன் கிட்டும்.
வயிற்றில் வாயுப் பிரச்சினை ஏற்படும் நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று திண்ணால் வாயுக் கோளாறு விரைவில் நீங்கும்.
|
A faster acting cough relief
A faster acting cough relief
Many recent studies have concluded that the extract from a natural pineapple juice can get rid of the mucus five times faster than other OTC cough medicines that can be found in the pharmacies, thereby it helps people that are suffering from accumulations of mucus, to recover 4.8 times faster than the people that are taking conventional medicines.
Pineapple juice fights mucus
Consuming pineapple juice doesn’t just soothe the irritation of nasty coughs, it also helps you reduce the annoying mucus. Back in 2010, researches were done attempting to find treatments to help people suffering from tuberculosis. The findings of the reports were published in the “Der Pharma Chemica”, including the fact that natural pineapple juice, mixed with honey, salt and pepper, taken daily helps to dissolve the mucus that deposits in the lungs, causing illnesses like Mycobacterium Tuberculosis.
Why you should make your own juice?
Many pineapple juices that can be found in the supermarkets include added sugar, so if you are watching what you eat, and managing your weight, it’s best to go for the natural unsweetened variety which can be found in most of the good supermarkets. Even a better solution for all holistic health lifestyle lover, is the juicer. If you have one at home, than you can buy fresh pineapples and make your own juice.
Here’s the recipe that will help you make your own natural pineapple juice cough mixture.
- Fresh lemon juice – approximately a ¼ of a cup
- 1 cup of fresh pineapple juice – preferably home juiced
- 1 tablespoon of unprocessed honey
- A small piece of ginger – about 3 inches long
- Half a teaspoon of hot chili pepper
Add all the ingredients in a juicer, and blitz! Get rid of the mucus and the annoying cough faster
Tuesday, February 9, 2016
காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டியவை!
| காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டியவை! |
| காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை எல்லோரும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால், டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் நிறைந்த நீராகாரங்களை குடித்து வந்தால், உடற்சக்தி அதிகரிக்கும். சிறுநீரக செயல்பாடு, செரிமானம், இரத்த ஓட்டம் போன்றவை மேம்படும்.
தண்ணீர்
காலை எழுந்தவுடன் தண்ணீருடன் அந்த தினத்தை தொடங்குவது சிறப்பு. இது வளர்ச்சிதை மாற்றத்தை 25% வரை வேகப்படுத்த உதவுகிறது. குறைந்தபட்சம் 500 மில்லி நீராவது பருகுங்கள்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து காலை எழுந்ததும் பருகுங்கள். இது உடல் உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமிளிக்கும்.
பூண்டு நீர்
பூண்டு நீர் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடியுங்கள். வெறும் வயிற்றில் இதை பருகுவது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, கல்லீரல் செயலாற்றல் சிறக்கவும் உதவுகிறது
மஞ்சள் நீர்
மஞ்சள் நீர் தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து பருகுவதால் ஆண்டி-ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரிக்கிறது. மேலும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையவும் இது பயனளிக்கிறது.
க்ரீன் டீ
க்ரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் உடலில் புத்துணர்ச்சி அதிகமாக காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகுங்கள்.
இஞ்சி டீ
இஞ்சி டீ காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது உங்களை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் மக்னீசியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
உருளைக்கிழங்கு ஜூஸ்
உருளைக்கிழங்கு ஜூஸ் சிறுநீரகத்தின் செயல்பாடு சிறக்க, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, செரிமானத்தை ஊக்குவிக்க தினமும் காலை உணவருந்தும் முன்பு உருளைக்கிழங்கு ஜூஸ் பருகுங்கள்.
|
Monday, February 8, 2016
பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
| பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன? |
பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.
நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.
பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.
இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
பூண்டுடன் பால்
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.
அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
|
நீர்க்கடுப்பா? கவலையை விடுங்கள்!
| நீர்க்கடுப்பா? கவலையை விடுங்கள்! |
உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம்.
சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.
அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில் கட்டிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெப்பம் சம்பந்தமான பிரச்னைகள் எதுவும் வராது.
|
Thursday, February 4, 2016
தினமும் பச்சை திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
| தினமும் பச்சை திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன? |
இதில், பச்சை திராட்சை அன்றாடம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள்.
ஒரு கப் பச்சை திராட்சையில் உள்ள சத்துக்கள்
கலோரி - 104, நார்ச்சத்து - 1.4 கிராம், விட்டமின், மினரல்ஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
திராட்சையில் விட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது. இதில் விட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும்.
அதேப் போல் விட்டமின் சி ஈறுகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று.
பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். மேலும் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும்.
மொத்தத்தில் சுவாச பிரச்சனை இருப்பவர்கள், பச்சை திராட்சையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்லது.
பச்சை திராட்சையில் மிகவும் முக்கியமான கனிமச்சத்தான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இந்த கனிமச்சத்தானது உடலில் நீர்ச்சத்து மற்றும் இரத்தத்தில் அமிலத்தின் அளவை சீராக பராமரிக்க இன்றியமையாத ஒன்று. முக்கியமாக தசைகளின் செயல்பாட்டிற்கு எலக்ட்ரோலைட்டுக்கள் மிகவும் முக்கியம்.
தினமும் சிறிது பச்சை திராட்சை உட்கொண்டு வருவதன் மூலம் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும்.
|
Wednesday, February 3, 2016
குடை மிளகாய்
| உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டிய காய்! |
100 கிராம் குடை மிளகாயில் உள்ள சத்துக்கள்
புரோட்டின் - 0.99 கிராம், சக்தி - 31 கலோரி, சோடியம் - 4 மி.கிராம், கொழுப்பு - 0.3 மி.கிராம், தாதுச்சத்து - 6.02 மி.கிராம், பொட்டாசியம் - 211 மி.கிராம், மெக்னீசியம் - 12 மி.கிராம், விட்டமின் சி - 127.7 மி.கிராம், கால்சியம் - 7 மி.கிராம், இரும்பு - 0.43 மி.கிராம்.
மருத்துவ பயன்கள்
1. குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் விட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
2. குடைமிளகாயில் உள்ள கேப்சைனின் என்னும் உட்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
3. தற்போது புற்றுநோய்கள் மக்களை அமைதியாக இருந்து தாக்குவதால், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர, புற்றுநோய் தாக்காமல் தடுக்கலாம்.
4. குடைமிளகாய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை அதிக அளவில் எரிக்க உதவும். இப்படி கலோரிகள் அதிகமாக கரைந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
5. குடைமிளகாய் வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் அமிலத்தின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே செரிமான பிரச்சனை இருந்தால், இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
6. தலைமுடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், குடைமிளகாயை உட்கொண்டு வருவதோடு, அதன் சாற்றினைப் பயன்படுத்துவதும் நல்லது. இதனால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியின் அடர்த்தியும் பராமரிக்கப்படும். ஆனால் இது எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதால், இதனைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
7. குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.
|
காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
| காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன? |
இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மருத்துவ பயன்கள்
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள டிரைகிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை, எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி, பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.
இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன், இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். ரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால், சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இதை சரிசெய்ய, பொட்டாசியம் சத்து நிறைந்த காளானை சாப்பிடுவது நல்லது.
காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான், மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக, காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.
குறிப்பு: காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.
|
Monday, February 1, 2016
தினமும் ஒரு கப் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம்
| தினமும் ஒரு கப் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம் |
ஆம், கேரட் மிகச்சிறந்த ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி.
கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்றுப்பார்த்தால், கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும்.
கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின் தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது, வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது.
கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும், இதேபோன்று ஜூஸாகவும் செய்து குடிக்கலாம்.
* தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருவது நல்லது.
* கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை தினமும் குடிப்பதன் மூலம் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
* மேலும் வைட்டமின் ஏ குறைபாடு சரிசெய்யப்பட்டு சருமம் வறட்சி அடையாமல் பொலிவுடன் இருக்கும்.
* உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
* சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
|
Subscribe to:
Comments (Atom)