Saturday, March 23, 2013

முகத்தை பளபளப்பாக்கும் ஆவி

முகத்தை பளபளப்பாக்கும் ஆவி

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும்.
மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும்.
ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.
ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும் வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?
சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
ஆவி பிடிப்பதால் என்ன நன்மை?
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்த்தால் முகப்பரு உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் முகப்பருவை நன்றாக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான்.

Wednesday, March 20, 2013

நெல்லிக்காய்

ஆஸ்துமா, நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய்

நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது.
 நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.
ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.
* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.
* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.
* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

Friday, March 1, 2013

Natural Theraphy for headache

Natural Therapy For Headaches!
In about 5 mins, your headache will go....... 

The nose has a left and a right side.
We use both to inhale and exhale.
Actually they are different.
You'll be able to feel the difference.

The right side represents the sun.
The left side represents the moon.

During a headache, try to close your right nose
and use your left nose to breathe.
In about 5 mins, your headache will go.

If you feel tired, just reverse, close your left nose
and breathe through your right nose.
After a while, you will feel your mind is refreshed.

Right side belongs to 'hot', so it gets heated up easily.
Left side belongs to 'cold'.

Most females breathe with their left noses,
so they get "cooled off" faster.
Most of the guys breathe with their right noses,
they get worked up.

Do you notice, the moment you awake, which side breathes better?
Left or right ?
If left is better, you will feel tired.
So, close your left nose and use your right nose for breathing..
You will feel refreshed quickly.

Do you suffer from continual headaches?
Try out this breathing therapy.

Close your right nose and breathe through your left nose.
Your headaches will be gone.
Continued the exercise for one month.

Why not give it a try.....a natural therapy without medication.