| இதய நோய்களுக்கு மருந்தாகும் பீட்ரூட் |
இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர்.
ஆய்வின் முடிவில், காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டின் சாறு எடுத்து ஒரு டம்ளர் குடித்தால் இதயம் சம்பந்தமான கோளாறை கட்டுப்படுத்தலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது இந்த சாறு குடித்த சில மணிநேரத்தில் ரத்த அழுத்தம் 4 முதல் 5 புள்ளிகள் குறைத்து நிவாரணம் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
|
Thursday, December 27, 2012
இதய நோய்களுக்கு மருந்தாகும் பீட்ரூட்
Friday, December 21, 2012
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா
| பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா |
தொடர்ந்து வரும் விக்கலை நீக்குவதுடன், வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது. வாத நோய்க்கும், வறட்டு இருமலுக்கும் சிறந்த மருந்தாகும்.
மாதவிடாய் தாமதமாகும் பெண்கள், இக்கீரையை உலர்த்தி தூள் செய்து தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.
புதினா இலையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும்.
புதினாவுடன் இஞ்சியையும், உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம், பித்தமும் அகலும்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம், மூட்டு வலி, ஆஸ்துமா, ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர் உபத்திரம் நீங்கும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது.
|
பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள்
| பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள் |
இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகளில் காணப்படுகிறது.
1. குறிப்பாக இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.
2. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும் குணமுடையது.
3. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும், தசைகளின் இறுக்கத்தை குறைத்து மென்மையடைய செய்யும்.
4. நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து, மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
5. நினைவாற்றலைத் தூண்டுவதுடன், கண்பார்வை தெளிவுறச் செய்யும்.
6. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயத்திற்கு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.
|
Wednesday, December 12, 2012
வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்
| வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம் |
பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.
இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது.
அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது.
|
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்
| கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் |
முக்கியமாக எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு கத்தரிக்காய் மிக நல்லது.
உலகம் முழுவதிலும் வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது.
கொழுப்பு சத்து குறைந்த கத்தரிக்காய், குறைந்த ஆற்றலை தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காயில் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது.
இந்நிலையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.
பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகியன அடங்கி உள்ளன.
கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.
கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. இவைகள் மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மாங்கனீசு நோய் எதிர்பொருள்களின் துணைக்காரணியாக செயல்படும்.
பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
|
Monday, November 19, 2012
தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்
இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.
Friday, October 5, 2012
உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்
| உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள் |
அவ்வாறு முயற்சி செய்யும் போது எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான் உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும்.
வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
முட்டை
அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
வெண்ணெய்
அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான்.
ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.
ஜூஸ்
உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும் சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
கோதுமை பிரட்
தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
ஓட்ஸ்
காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.
தயிர்
பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
உருளைக்கிழங்கு
கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
|
உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு
| உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு |
ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடைகளில் நிறைய மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது.
ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும் உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.
உணவுகள்
உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமென்றால் நல்ல ஆரோக்கியமான, இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
அதாவது கொய்யாப்பழம், டார்க் சாக்லேட், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் விதை, பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
நன்னாரி வேர்
மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.
கற்றாழை
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மாசடைந்த காற்று
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி மற்றும ஏர் ப்ரஸ்னர்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இதில் இருந்து வரும் கெமிக்கல் கலந்த வாசனையை நுகர்வதால், அந்த கெமிக்கல் இரத்தத்தில் கலந்து புற்றுநோய், சுவாசக்கோளாறு, ஹார்மோனில் சில தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
க்ரீம்கள்
உடலுக்கு தடவும் பாடி க்ரீம்கள் அல்லது லோசன்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் சில சமயங்களில் அந்த கெமிக்கல்கள் உடலில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஏதேனும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.
ஆகவே எப்போதும் கெமிக்கலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதை விட கற்றாழை, மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
|
Thursday, September 27, 2012
கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்
| கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல் |
அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
எலி ஒன்றின் உடலில் அடிபட்ட இடத்தில் ஊசி மூலம் உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால் வீக்கம் குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன.
இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம்.
கை, கால், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால் வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது.
உப்பு நீரை ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால் பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல் போன்ற எல்லா முறைகளும் வலி வீக்கத்தைக் குறைக்கின்றன.
கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர் இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று குளித்து நிவாரணம் பெறுகின்றனர்.
உண்மையில் வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது என்பதுவும் தெரியவந்துள்ளது.
|
Wednesday, September 26, 2012
சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்
| சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 02:59.45 மு.ப GMT ] |
ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும்.
ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.
கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது.
அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.
இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும்.
மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள்.
இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.
இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.
ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.
|
தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி
| தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி |
| [ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 04:16.43 பி.ப GMT ] |
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உண்டு. இப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது.
கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
குறிப்பாக பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் சாப்பிடுவதே சிறந்தது.
|
Thursday, September 20, 2012
தொப்பையை குறைக்க சில டிப்ஸ்
| தொப்பையை குறைக்க சில டிப்ஸ் |
இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது.
அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும்.
உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.
அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் அழகான இடுப்பைப் பெறலாம்.
எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், வயிற்றை குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
|
Thursday, August 23, 2012
பனிக்காலப் பிரச்னைகளிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வதற்கு
| பனிக்காலப் பிரச்னைகளிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வதற்கு |
இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் தொடங்கும்.
எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.
குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும்.
ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.
பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது.
இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்படுத்தாமல் தலை வலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர்களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.
பாதுகாப்பு முறை: சளி பிடித்திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும்.
மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும்.
இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.
காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
|
எலும்புகளை வலுவாக்கும் ஆலிவ் எண்ணெய்
| எலும்புகளை வலுவாக்கும் ஆலிவ் எண்ணெய் |
| [ புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 02:12.40 பி.ப GMT ] |
சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
மருத்துவர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வுக்காக எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது.
அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் அவர்களது எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது.
இதன் பின் எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் எண்ணெய்க்கு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
|
Monday, August 6, 2012
மரணத்தை தள்ளப் போடும் நெல்லிக் கனி
| மரணத்தை தள்ளப் போடும் நெல்லிக் கனி |
| [ சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 02:36.52 பி.ப GMT ] |
நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது, இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.
ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும், துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.
முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்தான்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கொண்டது.
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.
100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
இதய வால்வுகளில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். |
Friday, July 20, 2012
கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்
| கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ் |
| இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.
அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.
இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது.
அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
1. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.
2. 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழி.
3. சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.
4. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும்.
மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.
|
Thursday, July 19, 2012
மிளகின் மருத்துவ குணங்கள்
| மிளகின் மருத்துவ குணங்கள் |
மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.
கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.
இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது.
மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தரக்கூடியது.
தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.
மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.
எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.
மேலும் பல் வலி, பல் சிதைவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.
நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம்.
உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
ஆக்சிஜனேற்றியாக செயல்படும் மிளகு புற்றுநோய், இதயநோய், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
Thursday, July 5, 2012
குறைவாக சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
| குறைவாக சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல் |
| தினசரி உணவு உண்ணும் போது 40 சதவிகிதம் குறைவாக சாப்பிட்டால் 20 ஆண்டு காலம் ஆயுள்காலம் நீடிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லண்டனில் உள்ள பல்கலைகழகம் ஒன்று ஆரோக்கியம், முதுமை குறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மனிதவாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாது. வயதாக வயதாக நோய் ஏற்படும். மரபணுக்களின் காரணமாகவும் நோய்களும் ஏற்படுகின்றன. இதய நோய், புற்றுநோய், நரம்பியல் நோய்களும் மூப்பின் காரணமாக ஏற்பட்டு மரணங்களும் சம்பவிக்கின்றன.
சரியான உணவுப்பழக்கத்தின் மூலம் 30 சதவிகிதம் வயதாவதையும், நோய் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தினசரி வயிறுமுட்ட உண்டு உடலில் கொழுப்பை அதிகரித்துக் கொள்வதை விட 40 சதவிகிதம் குறைவாக உணவு உண்டு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறைவான அளவில் உணவு உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு வயதான பின்னர் வரும் அல்சீமர் நோய், இதயநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறைவாகவே ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
|
Tuesday, June 26, 2012
ஆப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம்
| ஆப்பிளை விட சிறந்ததாம் வாழைப்பழம் |
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.
ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.
நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது
சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.
இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.
நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது.
இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றி விடும்.
|
Tuesday, June 19, 2012
நாக்கு கடியை சரிசெய்ய...
நாக்கு கடியை சரிசெய்ய...
1. நாக்கு கடி என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல. மற்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை பார்த்தால், இது விரைவில் குணமடைந்துவிடும். எப்படியென்றால், வாயில் சுரக்கும் எச்சிலே எளிதாக அதனை விரைவில் குணப்படுத்திவிடும்.
2. எப்போது நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டு, இரத்தம் வருகிறதோ, அப்போது அந்த இடத்தில் உடனே ஐஸ் வைத்தால், வலி நின்று, இரத்தம் வருதலும் நின்றுவிடும்.
3. வாயை உப்புத் தண்ணீரால் கொப்பளிக்கலாம். அப்படி வெட்டுபட்ட இடத்தில் உப்பை வைத்தால் சிறிது நேரம் எரியும். ஆனால் அது ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் உப்பில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அது பாக்டீரியா மற்றும் பிற தொற்றுநோய்கள் வராமலும் தடுக்கும்.
4. உணவு உண்டப்பின், ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், தேனில் உள்ள மருத்துவ குணம் நாக்கு கடியை சரிசெய்யும்.
5. தண்ணீர் குடிக்கலாம். நாக்கு கடி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது சரியாகிவிடும்.
6. மேலும் நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டவர்கள் காரமான உணவுகளை உண்ண வேண்டாம். ஏனெனில் காரமான உணவு புண்ணை மேலும் பெரிதாக்குமே தவிர, விரைவில் குணமடைவது கூட தடைபடும்.
இந்த வீட்டு மருந்துகள் எல்லாம் நாக்குப் புண்ணை சரிசெய்யும். கடியானது சற்று ஆழமாக இருந்தால், அது சரியாக சற்று நாட்கள் ஆகும். பொதுவாக அத்தகைய நாக்கு கடி ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் சரியாகும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
Friday, June 15, 2012
நினைவுத் திறனை அதிகரிக்கும் பாசிப்பயறு
| நினைவுத் திறனை அதிகரிக்கும் பாசிப்பயறு |
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.
குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும்.
பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
|
Monday, June 11, 2012
உடலுக்கு வலிமையை தரும் தானியங்கள்
| உடலுக்கு வலிமையை தரும் தானியங்கள் |
இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான்.
இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.
கம்பு: கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
சோளம்: சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகு: வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகு: தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.
நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.
பச்சரிசி: பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
சம்பா: சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.
கோதுமை: அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.
பார்லி: குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
பார்லி காய்ச்சலை தடுக்கும், வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்.
|
Monday, June 4, 2012
ரத்தத்தை உற்பத்தி செய்யும் மாதுளை
| ரத்தத்தை உற்பத்தி செய்யும் மாதுளை |
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.
இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும்.இரத்த விருத்தி ஏற்படும். சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.
அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும்.
காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும்.
மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும்.
இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.
|
காது வலிக்கான தீர்வுகள்
| காது வலிக்கான தீர்வுகள் |
மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம்.
அப்படி காது வலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்கக் கூடாது. இதனால் காதுக்குள் கிருமித் தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது.
மேலும் இந்த காது வலி பொதுவாக இரவிலேயே வருவதால், என்ன செய்வதென்று தெரியாது. அப்போது இதற்கு நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியம் நன்கு கை கொடுக்கும். அது என்னென்னவென்று பார்க்கலாமா?
1. காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வலி குறையும்.
2. தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.
3. தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
4. மருதாணியின் வேரை நசுக்கி அதில் வரும் சாற்றினை காதில் விட்டால், காது வலி தீரும்.
5. கொஞ்சம் நல்லெண்ணையில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து, பின் அந்த எண்ணெய்யை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி குறையும்.
|
Thursday, May 31, 2012
முகத்தை பளபளப்பாக்கும் கேரட்
| முகத்தை பளபளப்பாக்கும் கேரட் |
காரட் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிறம் பொன்போன்று ஜொலிக்கும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அந்த அளவிற்கு சருமத்தினை பளபளப்பாக வைக்க உதவுகிறது காரட்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்.
பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.
குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உடலின் ஜீரண சக்தி சரியாக இருக்க வேண்டும். எனவே தினசரி நாம் உணவு உண்டபின் ஒரு கேரட்டை மென்றுத்தின்றால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும். உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும் ஜீரணத்தை துரிதப்படுத்தும்.
கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
கேரட் பேசியல்: இரண்டு கேரட்டினை எடுத்து நன்றாக கழுவி வேகவைக்கவும். அதனை மசித்து முகத்தில் அப்ளை செய்யவும்.
நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும். வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும்.
கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்கள் இருந்தால் உதிர்ந்து விடும். புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்.
நச்சுக்கழிவுகள்: கேரட்டில் உள்ள பொட்டாடிசியம், வைட்டமின் எ போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை.
தினசரி கேரட் ஜூஸ் குடித்து வர கோடைகாலத்தில் ஏற்படும் சருமநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். கோடையில் முகம் கருமையாவதை தடுக்கும். முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும்.
காரட்டினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் சருமப் பாதுகாப்பிற்காக விலை உயர்ந்த ரசாயனப் பொருட்கள் வாங்காமல் தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
|
Monday, May 14, 2012
கை தட்டுவதன் இரகசியம்
| கை தட்டுவதன் இரகசியம் |
இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர்.
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.
வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.
99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
|
ஆரோக்கியமான உடல் நலத்திற்கு
| ஆரோக்கியமான உடல் நலத்திற்கு |
கீரை: கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்க வேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.
அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறு சிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.
தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.
பால் மற்றும் பால் பொருட்கள்: இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.
பசும் பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப் போக்கு நோய்கள் குறையும்.
மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணைய் ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.
தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணைய் குளிர்த் தன்மை உடையது.
தண்ணீர்: நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.
குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.
அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது.
எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.
உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.
பயறு வகைகள்: பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.
பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.
பெருங்காயம் தேக வாயுவை குறைத்து வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.
|
Wednesday, May 9, 2012
உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா
உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா-? அப்படியென்றால் தொடர்ந்து படிக்கவும். பெண்கள் சாப்பிடும் உணவு வகைகளை பொறுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 80 சதவீதம் பேர் பெருமளவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்த பச்சை காய்கறிகளை தங்களது உணவில் எடுத்து கொண்ட பெண்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே வேளையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழம் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வருகிறது.
Monday, May 7, 2012
மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
| மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் |
மசாஜ் செய்வதால் தோலில் ஏற்படும் நன்மைகள் இணையற்றது. மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.
மசாஜ் தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். மசாஜ் தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட்களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும்.
ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் மசாஜ் நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மசாஜ் செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.
முறையாக செய்யப்படும் மசாஜ் இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. பொதுவாக மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்.
ஆனால் உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.
மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.
வயிற்றுப்போக்கு வாயுப் பிரச்சினை, சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
தோல் வியாதிகள் உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.
|
Friday, April 27, 2012
நல்லெண்ணெய் மகத்துவம்
நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.
நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது.
வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது.
உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.
நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது.
வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது.
உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.
ஆரோக்கியமான வாழ்விற்கு
| ஆரோக்கியமான வாழ்விற்கு |
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம். குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.
உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.
|
Wednesday, April 11, 2012
என்றும் இளமையாக இருக்க
| என்றும் இளமையாக இருக்க |
1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவு வேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர் இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதைமாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம் மேம்பட இது அவசியம்.
2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.
3. கார்போஹைட்ரேட்(50%), புரதம்(30%), கொழுப்பு(15%), வைட்டமின்கள், தாது உப்புகள்(5%) இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.
4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.
5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.
6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.
7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தண்ணீர் குடிக்கலாம்.
8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும் என்பது தவறான கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.
9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.
10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.
11. தவிர்க்க முடியா விட்டால் வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது. இரவில் அசைவம் வேண்டாம்.
12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.
13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.
14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல் 3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.
15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.
16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.
17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.
18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.
19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.
20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.
|
முருங்கையின் மருத்துவ குணங்கள்
| முருங்கையின் மருத்துவ குணங்கள் |
முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.
முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.
தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது, புரதம் - 6.7%, கொழுப்பு - 1.7%, தாதுக்கள் - 2.3% மற்றும் கார்போஹைட்ரேட்கள் - 12.5%.
|
Subscribe to:
Comments (Atom)