தடுப்பு முறைகள்
அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளைஅறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.
வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிடவேண்டாம்.
வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல், மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக்காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
பசலைக்கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள்
தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது.
மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம்.
அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன.
இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
No comments:
Post a Comment