Monday, October 13, 2014

நெஞ்சு சளியை போக்கும் வாழைப்பூ

நெஞ்சு சளியை போக்கும் வாழைப்பூ

வாழைப்பூ உணவாகவும், மருந்தாகவும் பயன் தரக்கூடியது.
வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன் புரதம் நிறைந்துள்ளது.
பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் (பிராங்க்கைடிஸ்) மலச்சிக்கலை (கான்டிபேஷன்) தணிக்கவும்,
குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாதவிலக்கு நேரத்தில் அடிவயிற்றையும் இடுப்பையும் கடுமையாக வலிக்கச் செய்து துன்பம் தருகின்ற (மென்ஃட்ருவல் கிராம்ப்) நோயைப் போக்க வல்லது.
வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்தில் (எக்ஸ்ராக்ட்) உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுப்பதும் ஆன உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது (ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்).

No comments:

Post a Comment