Friday, May 31, 2013

ஹெர்னியா ஒரு நோய் இல்லை இது ஒரு ரிப்பேர் தான்

ஹெர்னியா ஒரு நோய் இல்லை இது ஒரு ரிப்பேர் தான்:


செல்லி : பக்கத்து வீட்டு பொண்ணுக்கு திடீர்னு வயத்து வலி பா…துடிச்சு போச்சு.டாக்டர் கிட்ட போனா “ஹிரண்யா” வந்திருக்காம்..ஆபரேஷன் செய்யனும்னு சொல்லிட்டாங்களாம்..ஒரேக் கலக்கமா உக்காந்திருக்கு பா..
கூக்லி : மொதல்ல அது ஹெர்னியா ..ஹிரண்யா இல்லன்னு சொன்னியா?
செல்லி : ஹிஹி இல்ல..நானும் இவ்வளவு நாள் அப்படித்தானே நெனச்சிட்டு இருந்தேன்..
கூக்லி : அட.விட்டா ஹெர்னிய கசிவ ஹிரண்ய கசிபு ன்னு சொல்லுவீங்க போலிருக்கே !
செல்லி : சொன்னாலும் தப்பில்ல..ஆபரேஷன் பண்ற அளவுக்கு போயிருக்கே அது ராட்சசன் தானே!
கூக்லி : நீ நினைக்குற மாதிரி அது சீரியஸ் இல்ல ஆனா காம்ப்ளிகேட்டட் தான்.
செல்லி : என்ன கொழப்பறே..தெளிவா சொல்லு..அந்த ஹிரண்யா ச்சே ஹெர்னியான்னா என்ன..ஏன் வருது?
கூக்லி : மறுபடியும் சொல்றேன் ஹெர்னியா ஒரு நோய் இல்லே. இது ஒரு சின்ன ரிப்பேர்தான்.அதாவது வயித்துக்கு அடிப் பகுதில இருக்குற உட்சுவர் ல ஒரு ஜவ்வு போன்ற வலைதான் நம் குடல தாங்கி பிடிச்சிட்டு இருக்கும்..அந்த சுவர் வீக்கா போய் தளர்ந்து போகும் போது குடலும் எறங்கி அந்த வலை வழியா பிதுங்கிட்டு இல்ல துருத்திகிட்டு நிக்கும். இதை தான் குடலிறக்கம் அல்லது ஹெர்னியான்னு சொல்றது.
19 chelli -hernia
செல்லி : ஹெர்னியா இருந்தால் என்ன மாதிரி சிம்ப்டம்ஸ் இருக்கும்?
கூக்லி: வயறு வீங்கும்,அடி வயத்துல வலி அதிகமா இருக்கும்.சிலர் நடக்க சிரமப் படுவாங்க,வாந்தி கூட ஆரம்பிக்கும்.
செல்லி : ஆனா ஹெர்னியா ஆம்பிள சமாச்சாரம் தானே..பொம்பளைங்களுக்கு எப்படி வரும்?
கூக்லி: குடலிறக்கம் ரெண்டு வழியா ஏற்படும். ஆம்பிள பொம்பளண்ணு இல்ல..எல்லாருக்குமே வரும்.ஆம்பிளைங்களுக்கு இடுப்புக்கு கீழே சிறு நீர் கழிக்கும் உறுப்பை அடுத்து விரைகாய் இருக்கு அது வயத்தோட உட்பகுதிலேர்ந்து ஆரம்பிச்சு வெளில வந்து தொங்கும் ..இந்த பகுதி வீக்கா போகும் போது அவங்களுக்கு குடலிறக்கம் இந்த வழியா ஆகுது..பொண்ணுங்களுக்கு தொப்புள் பகுதி வீக்க்காக கூடிய பகுதி அது வழியா அவங்களுக்கு குடலிறக்கம் ஆகும்..புரியுதா?
செல்லி : முன்ன எல்லாம் பக்கத்து வீட்டு மாமா ,எதிர் வீட்டு மாமா ன்னு நிறைய அம்பது வயசுக்கு மேல போனவங்க கட்டி வந்தா மாதிரி நடந்துட்டு வருவாங்க..அப்ப கேட்டா ஹெர்னியா ஆபரேஷன் ஆச்சு அதான்னு சொல்லுவாங்களா..அதனால இது ஆம்பிளங்களுக்கு மட்டும் தான் வரும்னு நெனச்சேன்..இப்ப தெளிவா விளங்குது..ஆனா இப்ப எப்படி பொண்ணுங்களுக்கு அதிகமா இந்த ஹெர்னியா வருது?
கூக்லி : அது வேற ஒண்ணும் இல்ல அந்த கால அம்மாக்கள் மாதிரி இந்த கால பொண்ணுங்க குனிஞ்சு நிமிந்து வேல செய்யறதுல்ல..எல்லாத்துக்கும் மெசினு,போதாக் குறைக்கு உதவிக்கு ஆட்கள்..இதனால அவங்க வயத்து இடுப்பு பகுதி ரிஜிடா ஆயிடுது..கர்ப காலத்தும் போது நார்மல் டெலிவரி ஆகாம சிசேரியன்னு போறாங்க..இது மாதிரி ரெண்டு ஆபரேஷன்,இல்ல யூட்ரஸ் ஆபரேஷன்னு செய்யும் போது அந்த வயத்து பகுதி வீக்கா ஆகுது..அதனால அளவுக்கு அதிகமா பளு தூக்குவதாலும்,உடல் பருமன்னாலும் குடல் இறங்க ஆரபிச்சு இந்த பகுதி வழியா வெளில வர ஆரம்பிச்சு பிரச்சினை தருது..
செல்லி : ஒருவருக்கு இயற்கை கடனை கழிக்க அதிகமாக முக்குவதாலும்,சிறு நீர் கழிக்க சிரம படுவதாலும் குடலிறக்கம் வருமா?
கூக்லி: கண்டிப்பா வரும்..ஒவரா முக்குவதாலும்.வயதான ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் சுரப்பிகள் வீங்கி போவதால் சிறு நீர் கழிக்க அவஸ்தை படுவாங்க..அப்படி இருப்பவருக்கும் ஹெர்னியா வர சான்ஸ் இருக்கு..இது மட்டும் இல்ல அதிகமா இரும்பினாலும் வயத்து பகுதி வீக்காக போக சான்ஸ் இருக்கு.
செல்லி: ஓவர் எடை தூக்குவதால் ஹெர்னியா வருமா?
கூக்லி: அதை பத்தி உறுதியா சொல்ல முடியாது..எடை தூக்கலாம் ஆனா அதை தூக்கும் போது வயிற்று பகுதிக்கு அதிக ப்ரெஷர் தராம கால் முட்டிய கொஞ்சம் மடிச்சு குனிஞ்சு தூக்கனும்.இருந்தாலும் பெண்கள் ஓரளவுக்கு கர்பகாலத்துக்கு பின் சாகிரதையாக அதிக பளு தூக்காமல் இருப்பதே நல்லது.வாக்கிங் போகும் போது பிளாடர் முட்ட முட்ட தண்ணி குடிச்சிட்டு நடக்க கூடாது..இது கூட நாளடைவில் ஹெர்னியா வர வழி காட்டிடும்.
செல்லி : இது மருந்து மாத்திரையால குணப் படுத்த முடியாதா? ஆபரேஷன் செஞ்சா தான் சரி படுத்த முடியுமா?
கூக்லி: ஆமாம் ஆபரேஷன் தான் வழி..ஏன்னா இப்படி குடலிறங்கும் போது பெருங்குடலில் இருந்து வெளியேறும் கழிவு பொருட்கள் வெளியேறாம அடச்சிகிட்டு தங்கிடும்…இது உடனே அகற்றப் படலன்னா வேற விளைவுகளை ஏற்படுத்தும்.அதனால ஆபரேஷன் செஞ்சுக்கற்து தான் தீர்வு ….
செல்லி : இந்த ஆப்ரேஷன் லாப்ரோஸ்கோபி முறைல செஞ்சுக்க முடியுமா இல்ல வயத்த கிழிச்சு தான் ஆபரேஷன் செய்யணுமா?
கூக்லி: லாப்ரஸ்கோபி முறையிலயும் பண்ணலாம்.

செல்லி : ஆபரேஷன் செஞ்சுகிட்டவங்க எவ்வளவு சீக்கிரம் நார்மல் நிலைக்கு வர முடியும்..ஆபிஸ்கு போக முடியும்?
கூக்லி: சாதாரணமா ஒரு வாரத்துல நார்மல் நிலைக்கு வந்துடலாம்…இருந்தும் அது பேஷன்டோட உடம்பு வாகு எப்படிபட்டது அப்புறம் அவருக்கு இருந்த குடலிறக்கத்தோட அளவு இதையும் பொறுத்தது..
செல்லி : சரி ஆப்ரேஷன் செஞ்சுகிட்டவங்க என்னென்ன முன்னெச்சரிக்கைகளை பின் பற்றணும்?
கூக்லி : முடிஞ்சவரை நடக்கணும்…முன்னாடி எந்த அளவு எடை தூக்கிட்டு இருந்தாங்களோ அந்த அளவு எடை தூக்கி பழகணும்..நல்ல நார்சத்து இருக்குற உணவு சாப்பிடனும்,முடிந்த வரை ஹெல்தி யான வாழ்வு முறையை கடைப் பிடிக்கனும்.
செல்லி : ம்ம் நல்லா சொன்னே கூக்லி.. இதை எடுத்து சொல்லி அந்த பொண்ணைக் கவலப் படாம தைரியமா ஆபரேஷனுக்கு தயார் ஆக சொல்றேன்

No comments:

Post a Comment