| நோய்களை விரட்டும் பாதாம் |
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.
குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது.
இதய நோய்
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
கொலஸ்ட்ரால்
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.
இரத்த அழுத்தம்
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய்
நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.
நீரிழிவு
பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பித்தக்கற்கள்
பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.
இரத்த சோகை
காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது.
காப்பருடன் இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.
|
Tuesday, May 21, 2013
நோய்களை விரட்டும் பாதாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment