| புற்றுநோயை எதிர்க்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு |
அதிகமான ஆன்டி-ஆக்சிடென்டு
100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது.
ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சத்து
சர்க்கரை வள்ளிக் கிழங்கு இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச் சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.
இலைகளில் இருக்கும் அதிக சத்துகள்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.
நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கும்
மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.
புற்றுநோயை எதிர்க்கும்
நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம்.
|
Wednesday, November 26, 2014
புற்றுநோயை எதிர்க்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு
Monday, November 3, 2014
நுரையீரல் பிரச்சனையா? தினமும் பீன்ஸ் சாப்பிடுங்க
| நுரையீரல் பிரச்சனையா? தினமும் பீன்ஸ் சாப்பிடுங்க |
தற்போது மாறிவரும் காலக்கட்டத்தில் நமது உடல் நலத்தின் மீது அக்கறை என்பது அவசியமானதாகும். புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல் காற்று மாசுப்படுதலாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது.
பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுப்பட்டிருப்பதால், சுமார் 60 சதவிகிதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுசளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.
மருத்துவத்துறையில் பல்வேறு மருந்துகள் இருந்தாலும், ஆரோக்கியான உணவுகளை உண்பதன் மூலம் நம்மை காத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர். இதன் முடிவில் பீன்ஸ், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை கணிசமாக குறைந்தது தெரிந்தது.
மேலும் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும் போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.
தினமும் சுமார் 50 கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90 சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது.
அதனால் பீன்சை முழுவதுமாக வேகவைப்பதை காட்டிலும் அரை வேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது. பீன்சை வேகவைக்கும் போது அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் பீன்சின் முழுசத்துகளையும் பெறமுடியும்.
|