Wednesday, August 28, 2013

சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்

நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.
மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
கிவி
கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
செர்ரி
செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும்.
எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொய்யா
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும்.
அதுமட்டுமின்றி கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
பீச்
மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
பெர்ரிப் பழங்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
அன்னாசி
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
பேரிக்காய்
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பப்பாளி
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
தர்பூசணி
தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
மாதுளை
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
முலாம்பழம்
முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
நட்சத்திரப் பழம்
இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
வெள்ளை கொய்யா(White Jamun)
நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம்.
இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நெல்லிக்காய்
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும்.
இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

Saturday, August 24, 2013

புதினா கீரையின் மகத்துவங்கள்

புதினா கீரையின் மகத்துவங்கள்

நல்ல ரத்தத்தை உற்பத்தி செய்வதிலும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் புதினாக் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
புதினா கீரையை மணத்துக்காவும், சுவைக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்ப்பதுண்டு.
இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது, இரத்தம் சுத்தமாகும்.
வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு.
கர்ப்பிணிபெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.
புதினா இலைகளை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதியளவு சுண்டக்காய வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
சிறு குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கஷாயத்தில் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் :

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் :

இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.

நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.

எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கி, செடி, இலை, தண்டு, வேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலி, வீக்கம் குறையும்.

எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலி, வீக்கம் இரத்தப்போக்கு தணியும்.

வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.

கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.

மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.

பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலை, மாலை, பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.

மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்

பித்த வெடிப்பு



பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Thursday, August 22, 2013

'காபி', ' டீ' குடிங்க ! கொழுப்ப குறைங்க...!

'காபி', ' டீ' குடிங்க ! கொழுப்ப குறைங்க...!


தகவல் மட்டும்...

நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை காபி, தேனீர் குடிப்பதால், கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என, சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில், சிங்கப்பூர், டியூக் தேசிய பல்கலையின், மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள், "நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை, காபி அல்லது தேனீர் குடித்தால், கல்லீரலில் கொழுப்பு சேருவதை தடுக்கமுடியும்' என, கண்டுபிடித்துள்ளனர்.

மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கு, கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றுவதில், காபி, தேனீர், முக்கியப் பங்கு வகிக்கிறது' என, அவர்கள், தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்காக, கொழுப்பு நிறைந்த உணவை எலிகளுக்கு கொடுத்த விஞ்ஞானிகள், பின், அதற்கு காபியையும் உட்செலுத்தினர். இது, கல்லீரலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட, விஞ்ஞானி, பால் யென் கூறியதாவது: காபியில் உள்ள காபின், நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய விரிவான ஆய்வு இது தான். இதன் முடிவுகள் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. காபி, தேனீர் ஆகியவற்றை குடிப்பதால், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என, தவறாக சொல்லப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். தகவல்  இணையம்.

பிஸ்தாவின் நன்மைகள்

பிஸ்தாவின் நன்மைகள்

உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.
அதிலும் இந்த பருப்பை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் பார்வை சீராக இருக்கும். சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும்.
மற்ற பருப்புகளை போன்று இதிலும் கொழுப்பு தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஈரத்தன்மை கிடைக்கின்றது.
ஆரோக்கியமான இதயம்
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.
நோயெதிர்ப்பு அழற்சி தன்மை
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள், உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.
நீரிழிவு நோயை தடுக்கின்றது
பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.
இரத்தத்திற்கு ஏற்றது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.

Wednesday, August 14, 2013

எலுமிச்சையின் மகத்துவங்கள்

எலுமிச்சையின் மகத்துவங்கள்

மிக மலிவான விலையில் கிடைக்கும் எலுமிச்சை பழம், உடலுக்கு பல நன்மைகளை கொடுக்க கூடியது.
எலுமிச்சை என்றாலே அனைவருக்கும் அதன் புளிப்புச்சுவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த புளிப்புச்சுவை நிறைந்த சாற்றில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், ஃப்ளேவோனாய்டுகள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்துகள் போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியது.
குடலை சுத்தப்படுத்துதல்
எலுமிச்சையின் கசப்பு சுவை குடல் தசையின் இயக்கத் திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது.
அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும்.
புற்றுநோய்
லிமொனின்(Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன.
எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட்(Flavonal Glycoside) புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.
ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டு (Flavanoid) அதிகம் உள்ளன. இவைகள் நோய் தொற்றுக்கு எதிரான கலவைகள். ஆகவே எலுமிச்சையை அதிகம் சேர்த்தால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை தடுக்கலாம்.
ஒவ்வாமை/அலர்ஜி
எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கண்/பார்வை கோளாறுகள்
எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின்(Rutin), நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை கூட குணபடுத்தும்.
ஆன்டி வைரஸ்(Anti Virus)
எலுமிச்சை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக இருப்பதைத் தவிர, அதில் இருக்கும் டெர்பின் லிமினாய்டு (Terpin Liminoids) எனப்படும் தாவர இரசாயனங்கள் மற்ற வகை வைரஸ்களுக்கு எதிரானவை என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள்
எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது.
ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது.
அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது.
மேலும் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் உள்ளது.
செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.
இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

Sunday, August 11, 2013

மாம்பழத்தின் மகத்துவங்கள்

மாம்பழத்தின் மகத்துவங்கள்

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான்.
அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா?
பலர் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும்.
அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால் அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான்.
ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது.
சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்.
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.
மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால் இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

Saturday, August 10, 2013

ஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா?

ஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா?



உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள் 

சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும். 

Wednesday, August 7, 2013

‘பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோயைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

"இயற்கை தேவையை தள்ளிப்போடுபவரா நீங்கள்?

‘பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோயைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

இந்த பிரச்சனையை மருத்து உலகில் ‘ஹெமராயிட்ஸ்’ (Haemorhoids) என்றுழைக்கப்படும் நம்முள் பலருக்கு இந்த உபாதை இருந்தாலும் மருத்தவரிடம் செல்லவோ அதைப்பற்றி சொல்லவோ ஏனோ கூச்சப்படுகிறார்கள்! இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. தொண்டையில் சதை வளர்வதுப்போல்(Tonsils) இதுவும் ஒருவகை, அவ்வளவு தான்.

மலம் வெளியே வரும் பாதையில்(Anus) உள்ள இரத்தக் குழாய்கள் வீங்கி புடைப்பதால் வலி, சொறி எடுத்தல், சில நேரங்களில் இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

இதில் மூன்று வகை உள்ளன.

1.1st degree- உள்மூலம் – இதில் இரத்தம் வடிதல் மட்டும் இருக்கும் வலி இருக்காது.

2.2nd degree- வெளிமூலம் – சிறிது வெளியே புடைத்திருக்கும்(கோலிக்காய் போன்று) இதில் இரத்தம் வடிதலுடன் வலியும் சேர்ந்து இருக்கும்.

3.3rd degree- பாதையின் கடைசிப் பகுதி(Anus) வெளியே வந்து துருத்திக் கொண்டிருக்கும். வலி, இரத்தம் வடிதல் சொறி எடுத்தல் எல்லாமே இருக்கும்.

இவை ஏன் ஏற்படுகின்றன?

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்தால்

2. வயதாவதால்(இரத்தக் குழாய்கள் வலுவிழந்து விடுகின்றன)

3. கர்ப்பக் காலங்களில் கர்ப்பப்பை மூலத்திலுள்ள இரத்தக் குழாய்களின் மேல் அழுத்துவதால்.

4. மலம் இருக்க வேண்டும் எனத்தோன்றும் போது(Natures Call) சில பல காரணங்களால் அதைத் தவிர்த்து விட்டு நேரத்தையும் நளையும் கடத்துவதால்.

5. இயற்கையிலேயே (Hereditary) அந்த இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் பலகீனமாக இருப்பதால் (weak and fragile veins)

மலம் கழிப்பதை தள்ளிப் போடுவதால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா?

தினமும் கழிவுப் பொருட்கள் மலக்குடலை வந்தடையும் போது அது சற்றே இனக்கமாக நீர்ப்பதத்துடன் இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை வெளியேற்றாவிட்டால் அதிலுள்ள நீரை மலக்குடல் திரும்ப உறிஞ்சி கொள்ளும் (Reabsorption) அதனால் மலம் இறுகி கட்டியாகி விடுகிறது (Rock Like Mass) பின்பு அதை வெளியேற்ற நாம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ சிரமப்பட வேண்டியிருக்கும் (Straining at stools) அதனால் மலத்துவாரம் வழுவழுப்புத் தன்மையை சிறிது சிறிதாக இழந்து அந்த இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைந்து புடைக்க ஆரம்பிக்கின்றன விளைவு? ‘மூலம்-Piles’

நிவாரணம்

1. “Sitz bath” எனும் ஒன்று Surgical Supplies கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதில் சுடு நீர்(warm water) நிரப்பி அதில் நமது அடிப்பாகம் படுமாறு ஓர் அரைமணிநேரம் அமரலாம் Epsom Salt எனும் உப்பை வாங்கி அதில் ஓர்கை அளவு எடுத்து சுடுநீரில் கலந்தும் உட்காரலாம். இவை வலி இருக்கும்(Anus) பகுதியில் இரத்த ஓட்டத்தை கூட்டும்; அதே வேளையில் புடைத்துள்ள ‘மூலம்-பைல்ஸ்’ சுருங்கி வலியும் குறையும்.

2.அதேபோன்று, ஓர் பிளாஸ்ட்டிக் பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, அதை ஒரு தலையனை உறைக்குள் வைத்து அதன் மேலும் அரைமணி நேரம் உட்காரலாம்.

3. அல்லது சுடுநீரில் சிறிது நேரம், ஐஸ்கட்டிகளின் மேல் சிறிது நேரம் என மாறி மாறி உட்காரலாம்.

4. விக்ஸ் வேப்போரப் (Vicks Vaporub) எனும் மருந்தை வாங்கி வலிக்கும் இடத்தைச் சுற்றி (Around the anus not into the anus)தடவலாம்.

5. மாம்பழ சீசனில் மாங்கொட்டைகளைச் சேகரித்து நிழலில் நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் மூல வலி அதிகமாக இருக்கும் போது, 2 கிராம் பொடியை தேனில் குழைத்து காலையும் மாலையும் சாப்பிடலாம்.

6. வலி அதிகமாக இருக்கும் போது ஓரிரு நாட்கள் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து விட்டு, பழங்களாக உண்ணலாம்.

7. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது(Piles) வந்துவிட்டால் வலி இருக்கும் போது இடது பக்கமாக ஒருக்களித்து படுக்க வேண்டும் . இவ்வாரு நான்கு மணிநேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரம் படுக்கலாம். அவ்வாறு செய்தால் பெருத்துவிட்டு கர்ப்பப்பை இரத்தக் குழாய்களின் மேல் அழுத்திக் கொண்டிருப்பது குறையும், அதனால் வலியும் குறையும்.

8. அதிகமாக வலி இருக்கும் போது அதிக காரம், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

9. இறுதியாக நமது சொந்த முயர்சிகளினால் வலியோ இரத்தம் வடிதலோ நிற்காவிட்டால் மருத்துவரிடம் செல்வதே நல்லது ஏனென்றால் உங்களுக்கு வந்திருப்பது மூலவியாதியா(Piles) அல்லது மூல வெடிப்பா(Fissures) அல்லது மலக்குடலில் உள்ள வேறு எதாவது கோளாறா (புற்று நோயாகக்கூட இருக்கலாம்) எனத் தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவரால் என்னவெல்லாம் செய்ய இயலும்

1. உள் மூலமாக(internal piles) இருந்தால் இரத்தக் குழாய்கள் சுருங்குவதற்கும், மூலவாயின் வழுவழுப்புத் தன்மையை அதிகரிப்பதறகும், இரத்தக் குழாய்கள் வலிமையைக் கூட்டுவதற்கும் மருந்துகள் தரலாம்.

2. வெளி மூலமாக (External piles) இருந்தால் வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இரத்தக் குழாய்களை சுற்றி ஒருவித நூலால் இறுக்கிக் கட்டி (Tie off) அது தானாகவே சுருங்கி கிழே விழும் படி செய்யலாம்.

3.லேசர்(Laser) எனும் ஒளிக்கற்றையால் அந்த இடத்தை கருக்கி (Burn away) விடலாம்.

4.இறுதியாக ஒரு சிறிய ஆபரேஷன் மூலம் நீக்கிவிடலாம்.

மூலம் (Piles)வராமல் அல்லது குறைந்தது அடிகடி வராமல் தடுக்க இயலுமா?

முயன்று பார்க்கலாமே! அதில் தவறில்லையே

1. முதலில் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எப்படி? எவ்வளவு தலை போகிற வேலை இருந்தாலும் கழிவறை செல்லும் உணர்வு தோன்றி விட்டால் அதை புறக்கணிக்காது உடனே சென்று மலம் கழித்து விட வேண்டும்.

2.அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் உள்ளவர்கள் அதை ஈடுகட்டும் வகையில் சிறிது நேரம் நிற்கவோ அல்லது சற்று நடக்கவோ வேண்டும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் நடந்தாலே போதுமானது மலப்பாதையின் அழுத்தம் குறையும்.

3.உங்கள் சக்திக்கு மீறிய பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்; கெளரவம் பார்க்காது (Ego உள்ளவர்கள் கவனிக்க) பக்கத்தில் இருப்பவரின் உதவியை நாடுவதில் தவறில்லை.

ஒரே இடத்தில் நின்று சைக்கிள் மிதிக்கும் ஒருவித உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்(cycling on excersise bike)

4.உங்கள் சிறுநீர் மஞ்சள் கலரில்(Dark yellow) இல்லாமல் வெளிறிய மஞ்சள் கலரில்(Pale Yellow) இருக்குமாறு தண்ணீர் நிறைய பருக வேண்டும்.

5. உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் வகையில் தானிய உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்

6. இறுதியாக, மலத்துவாரத்தைச் சுற்றியுள்ள தசைகளும்(A ring of muscles) இரத்தக் குழாய்களும் (viens) பலம் பெறும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து செய்து வரலாம்.

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?



பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். 

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

Monday, August 5, 2013

உடற்பயிற்சி செய்யாமல் தொப்பை குறைய?

உடற்பயிற்சி செய்யாமல் தொப்பை குறைய?


தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம். 

ஓட்ஸ் ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும்.

முட்டை முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும்.

ஆப்பிள் ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

மிளகாய் மிளகாயில் உள்ள காப்சைசின், உடலின் மெட்பாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகளை கரைத்துவிடும்.

பூண்டு பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

மீன் மீனில் செரிவூட்டப்படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பை அதிகரிக்காது. அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

தேன் தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும் என்பது நமது பண்டைய கால மக்களின் நம்பிக்கை. உண்மையில் இது நம்பிக்கை மட்டுமல்ல, இது ஒரு இயற்கை வைத்தியமும் கூட.

க்ரீன் டீ க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கேரட் கேரட் சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த காய்கறியாக இருந்தாலும், அவை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதிலும் சிறந்தது.

குளிர்ச்சியான நீர் தினமும் குறைந்தது 2 லிட்டர் குளிர்ச்சியான நீரை பருக வேண்டும். ஏனெனில் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.