| கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல் |
அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
எலி ஒன்றின் உடலில் அடிபட்ட இடத்தில் ஊசி மூலம் உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால் வீக்கம் குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன.
இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம்.
கை, கால், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால் வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது.
உப்பு நீரை ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால் பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல் போன்ற எல்லா முறைகளும் வலி வீக்கத்தைக் குறைக்கின்றன.
கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர் இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று குளித்து நிவாரணம் பெறுகின்றனர்.
உண்மையில் வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது என்பதுவும் தெரியவந்துள்ளது.
|
Thursday, September 27, 2012
கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்
Wednesday, September 26, 2012
சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்
| சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 02:59.45 மு.ப GMT ] |
ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும்.
ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.
கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது.
அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.
இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும்.
மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள்.
இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.
இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.
ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.
|
தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி
| தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி |
| [ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 04:16.43 பி.ப GMT ] |
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உண்டு. இப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது.
கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
குறிப்பாக பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் சாப்பிடுவதே சிறந்தது.
|
Thursday, September 20, 2012
தொப்பையை குறைக்க சில டிப்ஸ்
| தொப்பையை குறைக்க சில டிப்ஸ் |
இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது.
அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும்.
உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.
அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் அழகான இடுப்பைப் பெறலாம்.
எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், வயிற்றை குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
|