அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கியமாக கணனி முன் உட்காரும் பெரும்பாலான மக்கள் அவதிப்படுவது கழுத்து வலியால் தான். இதற்கான சில முதலுதவிகளை இங்கே காணலாம்.
- மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும்.
- பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.
- தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்க ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்.
- அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போதும், கம்ப்யூட்டர் முன் அமரும் போதும் நேரான கோணத்தில் அமரவும்.
- நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.
- குப்புறப்படுக்காதீர்காதீர்கள் (வயிறு தரையில் படும்படி) இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.
- உறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம்.
- மேஜையில் அமர்ந்து பணியாற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.