Friday, October 30, 2015

வெந்நீர் குடிப்பது ஆரோக்கியமா? எப்போது குடிக்க வேண்டும்

வெந்நீர் குடிப்பது ஆரோக்கியமா? எப்போது குடிக்க வேண்டும்

காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம்.
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.
எந்த நேரத்தில் வெந்நீர் குடிக்கலாம்?
அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது ஆக்சிஜன்.
அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால் செரிமானத்தைத் தூண்டும்.
மருத்துவ பயன்கள்
தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன.
அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான்.
இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீர் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.
இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது.
இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.
வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும்.
போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.
இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில்(Toncil) அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்.
நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.

சோயாபீன்ஸில் இவ்வளவு நன்மைகளா?

சோயாபீன்ஸில் இவ்வளவு நன்மைகளா?

சோயா பீன்ஸ் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
எனவே இது பெண்களுக்கு சோயாபீன்ஸ் சிறந்த உணவாகும்.
சத்துக்கள்
தயாமின் (Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் உள்ளது.
100 கிராமில் 20 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் சோயாவில் 30 கிராம் கார்போஹைட்ரேட் (Carbohydrate) உள்ளது, மக்னீஷியம் (magnesium) 280 மி.கி, கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
மேலும் அனைத்துவகை விட்டமின்களும் உள்ளது.
மருத்துவ பயன்கள்
1. சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.
2. மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது.
3. இதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
4. இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், விட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.
5. சோயா எண்ணெய்யில் இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.
6, மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்கள் சோயாபீன்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகம் பெரிதாகும், ஏனெனில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் தன்னை சோயாபீன்ஸ்க்கு உள்ளது.
குறிப்பு
வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின்(Tripsin) என்கிற என்ஸைமின்(Enzyme) வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும்.
மேலும், உடலில் இரும்புச்சத்து உற்பத்தியை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க விட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.
சோயா பீன்ஸ் குழம்பு
முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!
பயன்கள்
சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள்.
எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

Friday, October 16, 2015

சளி

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
*
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
*
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
*
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
*
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
*
பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, October 5, 2015

சுண்டைக்காய் வற்றல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சுண்டைக்காய் வற்றல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும், உடல் சோர்வை நீக்கும்.
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும்.
வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.