| காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி! |
சமீபத்தில் காளானை சாப்பிட்டால், குறிப்பாக அதன் திரவச்சாற்றினை குடித்தால், தொப்பையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடல் பருமன் அதிகமாவதைத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியானது எலியின் மீது நடத்தப்பட்டு, அதனால் சாதகமான முடிவு வந்ததுள்ளதாம்.
இந்த ஆராய்ச்சிக்கு எலியைப் பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சியில் எலிக்கு கொழுப்புமிக்க உணவுகளைக் கொடுத்து வந்ததோடு, காளானும் கொடுக்கப்பட்டது.
அப்படி கொடுத்ததில், காளான் எலியின் குடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது தெரிய வந்ததோடு, எலியும் குண்டாகாமல் இருந்தது.
இதன்மூலம் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரிய வந்தது.
உடல் பருமன் உலகில் சுமார் 500 மில்லியன் மக்கள் தொப்பையாலும், 1.4 பில்லியன் மக்கள் உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர்.
நிச்சயம் அத்தகையவர்களுக்கு இச்செய்தி சந்தோஷமான ஒன்றாக இருக்கும்.
எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், காளான் சாற்றினை குடிக்க முடியாவிட்டாலும், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாக குறையும்.
|
Monday, September 28, 2015
காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி!
Friday, September 25, 2015
தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
| தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் |
உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.
ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.
ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது.
அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.
உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.
வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
|
Subscribe to:
Comments (Atom)