Friday, January 30, 2015

நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.
இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்...

* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

* முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும்.  இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.

* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.

* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் ஜூஸை குடிக்கலாம்.

* உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும்.  மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால் உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும் வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக் கொள்ளலாம்.

* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில் விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்.

Tuesday, January 27, 2015

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா!

ஆரோக்கியமான இயற்கை உணவுகளே வாழ்நாள் முழுவதும் நமது உடல்நலத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.
பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவாக சோயா மட்டுமே உள்ளது.
பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.
ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்யும்
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது.
உடல் எடை கட்டுப்பாடு
உடல் எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை, குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
இதயத்திற்கு நல்லது
இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து சேருவதே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.

Tuesday, January 20, 2015

தினமும் உணவில் ரசத்தை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள்
[ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 11:08.17 மு.ப GMT ]
அன்றாடம் உணவில் ரசத்தை சேர்த்து வரும் போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
தென்னிந்தியாவில் பிரபலமாக கருதப்படும் ரசம், உணவுடன் அன்றாடம் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியாமலே அதை அனைவரும் விரும்பி உண்கின்றனர்.
இது உடல் எடையை குறைப்பது, உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது, வயிற்றுப் பிரச்சனைகளை குணப்படுத்துவது என உடல்நலத்திற்கு தேவையான பல முக்கிய வேலைகளை செய்கிறது.
கனிமச்சத்துக்கள் நிறைந்தது
ரசத்தில் மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தைகளுக்கும் நல்லது
குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் பெரும்பாலான குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் எனலாம்.
நோயாளிகளுக்கு நல்லது
நோயாளிகள் ரசத்தை எடுத்துக் கொள்வது நல்லது. நோயால் அவதிப்படும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட ரசம் சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் சேர்க்கப்பட்டள்ள பொருட்கள், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை அதிகரித்து, உடலை விரைவில் குணமாக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்தது
ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது.
வயிற்றுப்போக்கை சரிசெய்யும்
ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.
புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும்
ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
மலச்சிக்கலைத் தடுக்கும்
ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எடையைக் குறைக்க உதவும்
அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். இது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்பிணிகள் கூட ரசத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.
வைட்டமின்கள் நிறைந்தது
ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.