| கர்ப்பப்பையை வலிமைபடுத்தும் கருப்பட்டி |
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
|
Monday, July 21, 2014
கருப்பட்டி
Friday, July 18, 2014
உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்!
| உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்! |
ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
என்னென்ன தேவை?
வறுத்துப் பொடித்த கொள்ளு,
வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
சீரகத்தூள் - 1 சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.
* தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.
|
Monday, July 14, 2014
மலச்சிக்கலை குணப்படுத்தும் கொய்யா
| மலச்சிக்கலை குணப்படுத்தும் கொய்யா |
கொய்யாப் பழத்தில் `வைட்டமின் சி' சத்து நிறைந்திருக்கிறது. கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து. அதற்காக இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம்.
* வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப்பழங்களை சாப்பிடுவது நல்லது. சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.
* கொய்க்காப் பழத்தை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு கொட்டைகள் நீக்கிய கொய்யாப் பழத்தை அரைத்து, அதனுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து தோசையாக வார்த்து கொடுக்கலாம்.
* ரத்த சோகை இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடலில் சக்தி ஏறும்.
* சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல் செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
* கொய்யா மரத்தின் வேர் மற்றும் பட்டையை சுத்தம் செய்து நசுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் வாய்ப்புண் குணமடைவதுடன், அது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.
* மா இலையுடன் கொய்யா இலையை காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால், பல்லில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.
* மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
![]() |
தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காயின் மகத்துவம்
| தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காயின் மகத்துவம் |
உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.
'சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்க் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.
ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும்; உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும். இதனை 'பித்த சமனி' என்றும் சொல்வர்.
சுரைக்காயில் விட்டமின் பி மற்றும் சி உள்ளன. கை, கால்களில் குறிப்பாகப் பாதங்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குணமாகும். சுரைக்காயின் சதைப்பகுதியோடு எலுமிச்சம்பழத்தின் சாற்றினையும் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால், குளிர்ச்சி ஏற்படும்.
தினமும் சுரைக்காய் சாறு அருந்திவந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய எரிச்சல், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோயினால் ஏற்படக்கூடிய எரிச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்.உடலில் உள்ள தேவையற்ற நீர்ச்சத்துக்கள் நீங்கி எடை குறையும்.
சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு குளிர்ச்சியும் ஏற்படும். சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் தடவிவர, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு இந்த சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டியும், அதனை அரைத்தும் பயன்படுத்தலாம்.
மெலனின் குறைப்பாட்டினால் ஏற்படும் அல்புனிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு (உடலில் ஆங்காங்கே வெள்ளையாக இருக்கும், சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படும்) சுரைக்காயை அரைத்துத் தேய்த்து வந்தால், எரிச்சல் குணமாகும்.
பொதுவாகச் சுரைக்காய் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது.இதனை, குளிர்காலத்தில் பயன்படுத்தும்போது சளிபிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்தூள், உப்பு ஆகியவை கலந்து சாலட் செய்து சாப்பிடலாம்.
சுரைக்காய் குடுவையில், தண்ணீரை சேமித்துவைத்துக் குடித்து வந்தால் அதிகப்படியாக ஏற்படும் தாகம் குறையும். அந்தத் தண்ணீரில் உள்ள வைட்டமின் சத்துக்களும் அதிகமாகும். இந்த நீரில் தேனை வைத்து பாதுகாத்தும் உண்டு வரலாம். இந்தச் சுரை ஓட்டினைச் சாப்பிட அல்லது உணவுப்பொருட்கள் வைக்கும் பாத்திரமாகவும் பயன்படுத்தலாம் என்கிறார்.
சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டுவந்தால், நீர் பிணிகள் நீங்கும். உடலில் ஏற்படும் வீக்கங்களையும், நீரேற்ற பிணிகளையும் குறைக்கும். சிறந்த மலமிலக்கியாகவும், சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டக்கூடிய பொருளாகவும் செயல்படும்.
சுரை இலையுடன் தண்ணீர் சேர்த்துக் கசாயம் தயாரித்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை சரியாகும்.
சுரை இலைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து எண்ணெய் தயாரித்துக்கொள்ளலாம். காச நோயினால் ஏற்படக்கூடிய நிணநீர் கோள வீக்கம், அதிகமாகச் சளி பிடிக்கும் குழந்தைகளுக்குக் கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய கண்டமாலைக் கட்டிகளுக்கு, இந்த எண்ணெயை வெளிப்புறமாகத் தடவி வந்தால், கட்டியின் வீக்கம் விரைவில் குறையும்.
|
Thursday, July 10, 2014
உங்கள் ஆயுளை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க வேண்டுமா?
| உங்கள் ஆயுளை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க வேண்டுமா? |
சூரிச் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது நாள்தோறும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் என்பவற்றுடன் வழமைக்கு மாறான வாழ்க்கை முறையை கொணடு சிறிதளவில் பழங்களை உள்ளெடுப்பவர்கள் தமது ஆயுளில் 10 ஆண்டுகளை அதிகரிப்பதற்கான சாத்தியம் 35 சதவீதம் காணப்படுவதாகவும்,
அதே வயதை உடைய ஒருவர் எந்தவிதமான புகைப்பழக்கங்களோ, குடிப்பழக்கங்களோ இல்லாது பழங்களை போதியளவில் உள்ளெடுத்து நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் தனது ஆயுளை 10 ஆண்டுகளால் அதிகரிப்பதற்கான சாத்தியம் 67 சதவீதம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு ஆயுளை அதிகரிப்பதற்கான கல்குலேட்டர் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
அவற்றில் தரப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் உங்களிடம் இருக்கின்றதா, இல்லையா என்று பதிலளிப்பதன் ஊடாக ஆயுள் வயதை கணித்துக்கொள்ள முடியும்.
இது பெண்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Subscribe to:
Comments (Atom)

