| பயறு சாப்பிட்டு வயிறு நிறைய சிரியுங்கள் |
அதனை தான் வயிறு சிரிக்க பயறு சாப்பிடுங்கள் என்கின்றனர்.
பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட்களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும்.
இதன் மூலம் மனது இலகுவாகும், நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும். இந்த பயறு வகைகளில் பி காம்பளக்ஸ், வைட்டமின் பி1, பி2, பி3, பிஎஸ், பி6, பி12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் டி, இ, சி மற்றும் கே, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.
பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத்தையும், கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது.
உதாரணமாக பாசிப் பயிறுகளை உணவில் அதிகளவில் சேர்க்கும்போது ரத்த சோகை, நரைமுடி ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது.
கர்ப்பிணிகள் அதிகளவில் பாசிப்பயறு சேர்த்துக் கொள்வது குழந்தைக்கும் சேர்த்து நல்லது.
மேலும் முளைகட்டி அவற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம். முளைகட்டிய 25 கிராம் வெந்தயத்துடன் 5 சிறிய வெங்காயம், ஒரு கேரட் ஆகியவற்றை பொடி செய்து சேர்த்து உட்கொள்வது நல்லது.
தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம். கொள்ளு ரசம் வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கொழுப்பு குறைந்து உடலில் சக்தி அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையை அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் வலிமை பெறும்.எள்ளுவை நன்றாக தோல் நீக்கி அவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து இடித்து சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பார்வை குறைபாடுகள் முற்றிலும் அகலும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எள்ளு மிகவும் ஏற்ற மருந்தாகும்.
|
Friday, March 28, 2014
பயறு சாப்பிட்டு வயிறு நிறைய சிரியுங்கள்
Wednesday, March 26, 2014
வறட்சி இருமல் வரட்டு இருமல் வரும் போது, எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து, அதில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2013/home-remedies-common-health-problems-004551.html#slide13754
Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2013/home-remedies-common-health-problems-004551.html#slide13754
கண் பார்வை தினமும் கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். அதுமட்டுமின்றி கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். மேலும் கண்கள் சிவப்பாக இருப்பதை மாற்றும்.
Friday, March 14, 2014
உன்னத பலன்களை தரும் செவ்வாழை!
| உன்னத பலன்களை தரும் செவ்வாழை! |
செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
|
Subscribe to:
Comments (Atom)