| தொப்பை குறைய எளிய பயிற்சி |
இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.
கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும். பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
|
Sunday, September 29, 2013
தொப்பை குறைய எளிய பயிற்சி
Saturday, September 28, 2013
இயற்கையான உடல் அழகைப் பெற உதவும் பாட்டி குறிப்புகள்
| இயற்கையான உடல் அழகைப் பெற உதவும் பாட்டி குறிப்புகள் |
அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.
அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான்.
ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே.
ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது.
மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர்.
ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிசொன்ன அழகுக் குறிப்புகளை பார்ப்போம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள்.
எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.
முகத்தை கழுவுதல்
முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
ஆவிப் பிடித்தல்
ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள்.
எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
பழங்கள்
கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக பழங்களை வைத்து மாஸ்க் போட்டால் அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.
அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
முடி மசாஜ்
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
தயிர்
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால் கூந்தல் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
சூப்பர் மாய்ஸ்சுரைசர்
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால் சருமம் மென்மையாக ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி இருக்கும்.
எலுமிச்சை
பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான்.
ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.
நெய்
உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல் சிறிது நெய்யை தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கடுகு எண்ணெய்
கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக தினமும் காலையில் எழுந்ததும் கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கைகள் மென்மையாக முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.
|
Thursday, September 26, 2013
வயிற்று வலி குணமாக எளியவழி
| வயிற்று வலி குணமாக எளியவழி |
அது எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும் இந்த எளிய மருந்து குணப்படுத்தும்.
அரை தேக்கரண்டி சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் இருபது நிமிடத்தில் வயிற்று வலி குணமாகும்.
|
Thursday, September 19, 2013
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பாகற்காய்
| நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பாகற்காய் |
பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.
பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.
ஒரு பிடி கொடுப்பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். அதே இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை தொடர்ந்து ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்தலாம்.
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
|
Sunday, September 15, 2013
மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்
இன்றைய அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம்.
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
இன்றைய அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம்.
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
தக்காளியின் வியக்க வைக்கும் நன்மைகள்
| தக்காளியின் வியக்க வைக்கும் நன்மைகள் |
தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான்.
அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே.
சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப்(150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும்.
இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது.
உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.
இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது.
தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.
ஆரோக்கியமான சருமம்
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது.
அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
வலுவான எலும்புகள்
வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும்.
மேலும் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.
புற்றுநோய்க்கு எதிராக போராடும்
இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் குணத்தை கொண்டவ. மீண்டும் லைகோபீன் தான் இதற்கும் துணை புரிகிறது.
அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து காக்கும்.
அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்பு கோளாறுகளை எதிர்த்து போராடும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் தக்காளியில் உள்ளது.
நீரிழிவு
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது.
ஏனெனில் தக்காளியில் குரோமியம் வளமையாக உள்ளதால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
பார்வை கோளாறு
தக்காளி கண் பார்வையையும் மேம்படுத்தும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும்.
மேலும் இது குணப்படுத்த முடியாத கோளாறான மாக்குலர் டி-ஜெனரேஷன் வரும் ஆபத்தையும் தடுக்கும்.
பொலிவான கூந்தல்
கூந்தலைக் கூட தக்காளி அழகாக காட்ட உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
கூந்தல் உதிர்தலுக்கு தக்காளி உதவவில்லை என்றாலும் கூட, இருக்கும் கூந்தலை அழகாக காட்ட உதவும்.
சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்கள் உருவாவதை தடுக்கும்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தக்கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும்.
அதிலும் தக்காளியை கொட்டை இல்லாமல் உண்ணுபவர்களுக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக் கற்கள் உருவாவது தடைபடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
கடுமையான வலி
கடுமையான வலிகளுக்கு தக்காளி ஒரு நிவாரணியாக விளங்குகிறது.
லேசானது முதல் கடுமையான வலியை(கீல்வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் லட்சக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் தக்காளி உங்களுக்கு உதவி புரியும்.
தக்காளியில் உள்ள பயோஃப்ளேவோனாய்ட்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் அதிகமாக உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.
கடுமையான வலி என்றால் அதில் கடுமையான அழற்சியும் அடங்கும். அதனால் அழற்சிக்கு எதிராக போராடினால் இவ்வகை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எடையை குறைக்க
தக்காளி உடல் எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறைக்க டயட்டில் இருந்தால், கண்டிப்பாக தினமும் பல தாக்காளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிறந்த உணவாக விளங்கும் இது, சாலட் மற்றும் சாண்ட்விச்சாகவும் விளங்கும்.
தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை எடையை குறைக்க உதவுவதோடு, வயிற்றையும் நிறைக்கும்.
மேலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.
|
Saturday, September 7, 2013
திராட்சை பழத்தின் நன்மைகள்
| திராட்சை பழத்தின் நன்மைகள் |
ஆனால் எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.
அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.
குழந்தைகளுக்கு திராட்சை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதன் நிறம் குழந்தைகளை ஈர்ப்பதாலேயே. மேலும் திராட்சையை பலவாறு சாப்பிடலாம்.
அதில் ஜூஸ், ஜாம், ஜெல்லி, ஒயின், வினிகர் போன்றவை. சரி, தற்போது அந்த திராட்சையை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
* இதயத்தைப் பற்றி கவலை கொள்பவர்களாக இருந்தால், உடனே அந்த கவலையை விடுங்கள். ஏனெனில் ஒரு டம்ளர் ஒயினை சாப்பிடும் போது எடுத்துக் கொண்டால், இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
* திராட்சையின் நன்மைகளில் ஒன்று தான் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்வது. ஆம், இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட், செல்லுலோஸ் மற்றும் சர்க்கரை, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது.
எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்தால், குணமாகிவிடும்.
* திராட்சையில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டு வர, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கும்.
* திராட்சையில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளுள் ஒன்றான க்யூயர்சிடின் இருப்பதால் அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
* திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சியை தடுக்கும் பொருள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் நாள்பட்ட காயங்களை சரிசெய்யவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும் அழித்துவிடும்.
* மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகளான அந்தோசியனின்கள் மற்றும் புரோஅந்தோசியனின்கள், புற்றுநோய் மேலும் பெரிதாவதைத் தடுக்கும்.
* நன்கு கனிந்த திராட்சையால் செய்யப்பட்ட ஜூஸ் சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலியைத் தடுக்கலாம். அதிலும் இது நாள்பட்ட வலியாக இருந்தால் தினமும் காலையில் தண்ணீர் சேர்க்காத திராட்சை ஜூஸ் குடித்து வர குணமாகும்.
* திராட்சையில் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது நரம்பியல்-சிதைவு வளர்ச்சி நோய் ஏற்படுவதையும் தடுக்கும் திறனுடையது.
* திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால் உடல் எடை குறைய உதவியாக உள்ளது. மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும், ரெஸ்வெராட்ரால் கொழுப்புக்கள் தங்குவதை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.
* திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ளும். மேலும் திராட்சை ஜூஸை தினமும் சாப்பிட்டு வந்தால் முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.
![]() ![]() |
Thursday, September 5, 2013
இரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுகள்
| இரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுகள் |
ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானது மிகவும் இன்றியமையாதது.
எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில் இருந்தால் தான் அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.
அதுமட்டுமின்றி அசுத்த இரத்தமானது உடலில் இருந்தால் உடலில் மட்டுமின்றி சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.
ப்ராக்கோலி
இந்த பச்சை நிற காய்கறியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
இவை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் ஆபத்தை விளைவிக்கும் கொடிய நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
முட்டைகோஸ்
வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.
காலிஃப்ளவர்
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது.
ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பாகற்காய்
கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
அதிலும் பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.
வேப்பிலை
வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு
பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது.
மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.
கேரட்
கேரட் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.
எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
அன்னாசி
பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி டீ
இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.
பார்ஸ்லி
சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது.
மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காய்
நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது.
ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
|
Tuesday, September 3, 2013
தண்ணீர் அதிகம் குடிப்பதற்கான அறிகுறிகள்!!!
| தண்ணீர் அதிகம் குடிப்பதற்கான அறிகுறிகள்!!! |
| நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.
மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.
அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது.
சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.
* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.
* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.
* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.
மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.
* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.
* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.
* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.
* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.
* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.
* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
|
Subscribe to:
Comments (Atom)

