கறிவேப்பிலை
பெரும்பாலானோர் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே கருவேப்பிலையை கருதுகின்றனர்.
ஆனால் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியுமாகும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும்.
சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
Sunday, June 30, 2013
Saturday, June 29, 2013
ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்
வலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந் நரம்புகள் வலியிருக்குமிடத்திலிருந்து வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை, மாறாக இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன.
அன்பு, பரிவுடன் இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடும். இதைவிட மலிவான மருந்து என்ன இருக்கிறது.
வால்நட் சாப்பிடுங்கள்
பழகத் தெரிந்த மனமே விலகத் தெரியாதா?
சூழ்நிலை மாற்றத்தை ஏற்க இயலாத மனநிலை.
பழகிய விசயங்கள், பழகிய மனிதர்களை, பழகிய இடங்களைவிட்டுப் பிரிய முடியாத தவிப்பு.
சூழ்நிலை மாற்றங்களைப் போலவே உடலில் ஏற்படும் பருவ வளர்ச்சி மாற்றங்களால் பாதிப்படைதல்.
தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கைகளில் மூழ்கி கிடத்தல்.
பல ஆண்டுகள் ஒரு தெருவில் குறிப்பிட்ட வீட்டில் குடியிருந்து விட்டு அடுத்த ஊருக்கு மாற்றுதலாகி வீட்டை காலி செய்து விட்டு போகும்போது அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்களை விட்டு, பழகிய நபர்களை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உள்ளதே என்று மனங்கலங்குபவர்கள்.
புதிய வீட்டில் புதியதொரு சூழலில் அங்குள்ள நிலைமையை ஏற்றுக் கொள்ளாத மனநிலை ஏற்படும்போதும் வழக்கமாக தூங்கிய இடத்தை விட்டுவிட்டு புதிய இடத்தில் படுத்திருப்பதால் தூக்கமின்றி தவிப்போர்கள், ஒரு சில நாட்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். புதிய நீர் ஒத்துக்கொள்ளாமல் தொண்டை அலர்ஜி போன்ற உடல் உபாதைகள் தோன்றும் போது வால்நாட் சில உருண்டைகளை சில வேளைகள் சுவைத்து சாப்பிடும்போது புதிய சூழ்நிலையோடு ஒத்துப்போகும் மனநிலை உருவாகும். பெண்ணை திருமணம் செய்து கொடுத்து புகுந்த வீடு அனுப்பும் போது பெற்றோர், உடன்பிறந்தோர்களுக்கு ஏற்படும் மனதவிப்புக்கும், பெற்றோர், உற்றோரையும் பிரிந்து செல்கிறோமே என்று புதுமணப் பெண்ணுக்கு ஏற்படும் தாங்க முடியாத பிரிவின் தவிப்பிற்கு வால்நட் வரப்பிரசாதம்.
பழகிய பழைய காதலை, காதலியை மறக்க முடியாமல் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா. பழகத் தெரிய உயிரே உனக்கு விலக தெரியாதா? என்ற பாடலுக்கு பொருத்தமான மனநிலையை சீர் செய்ய வால்நாட் உதவும்.
சிலருக்கு வாழ்க்கை சூழல் அலுவலக பணியின் தன்மை காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது தங்குமிடம், அங்குள்ள உணவு முறைகள், தண்ணீர் போன்றவை ஒத்துக்கொள்ளாமல் உடல் ரீதியாக ஏற்படும் கோளாறுகளுக்கு வால்நட் பயன்படும்.
புதிதாக திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண்களுக்கு அங்குள்ள சூழ்நிலையோடு ஒத்துப் போகவும்,மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை எளிதில் புரிந்து கொண்டு புதிய குடும்பச் சூழ்நிலையோடு சகஜமாக கூச்சமின்றி பழகி ஒன்றினைய வால்நட் உதவும். எனவே புதுமணப் பெண்ணுக்கு சீர்வரிசைகளுடன் வால்நட் கொடுத்தனுப்புவது நல்லது.
சூழ்நிலை மாற்றங்களைப் ஏற்காத மனநிலையைப் போலவே உடலின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படும் மாற்றத்தின் போதும் வால்நட் உதவும். பிறந்த குழந்தை குப்புறப் புரண்டு படுக்கும்போதும், தவழ்ந்து,எழுந்து நிற்க, நடக்க, முயற்சிக்கிறபோது, பல்முளைக்கும் போதும், பள்ளி செல்லும் வயதில் தினம்தோறும் விரும்பி பள்ளி செல்ல தயார் ஆகவும், பெண்பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறுகிறபோது, உடலளவில், மனதளவில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்திடும் அற்புத மலர் மருந்து வால்நட்.
குமரியாக இருந்தவள் மனைவியாக, குடும்பத் தலைவியாக, கர்ப்பிணியாக தாய்மையடைந்து, குழந்தைக்கு பாலூட்டும் போதும் மாதவிடாய் நிற்கும்காலத்தில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவும் வால்நட். ஆண்களுக்கும் வாலிபப் பருவத்திலும், திருமணமானபின்பு குடும்பத் தலைவராக பொறுப்பேற்று குடும்பத்தை வழிநடத்துகிறபோதும் புதிய, புதிய சூழ்நிலைகளை சிந்தனை தெளிவுடன் சமாளித்திட வால்நட் பயன்படும்.
தவறான தீய பழக்க வழக்கங்களை மாற்றியமைத்திடவும் நெடுநாள் பழகிய விசயங்கள் தவறானது என்று தெரிந்தும் விடமுடியாமல் தவிப்போர்கள், திருமணமானபின்பும் பல பெண்களுடன் பாலியல் தொடர்புகளை துண்டித்து கொள்ளாமலிருப்பவர்கள் மற்றும் சுயஇன்ப பழக்கத்திலிருந்து விடுபட இயலாமையால் மனம் வாடுவோர்க்கும் கைசூம்பும் பழக்கமுள்ள குழந்தைகள், தாய்பாலை மறக்காமல் உள்ள குழந்தைகள்,படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள குழந்தைகள், மது பழக்கம், புகை பழக்கம் மற்றும் இதர போதைப் பழக்கங்களை கைவிட முடியாமல் தவிப்போர்களுக்கு வால்நட் நல்வழி காட்டும்.
மலர் மருந்துகளை எந்தவிதமான சிகிச்சை முறைகள் மேற்கொள்பவர்களும் சாப்பிடலாம். பத்தியங்கள்,பின்விளைவுகள் ஏதுமில்லை. மலர் மருந்துகள் மூலம் மனதில் படியும் மாசுக்களை துடைத்து... மனம் மலர்ச்சி பெற்று வாழ்க்கையை மணம் வீசச் செய்யலாம்.
Thursday, June 27, 2013
நல்லெண்ணையின் மகத்துவங்கள்
| நல்லெண்ணையின் மகத்துவங்கள் |
ஆனால் நல்லெண்ணெயிலும் அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது.
மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள்.
ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.
ஆரோக்கிய இதயம்
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.
நீரிழிவு
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.
வலுவான எலும்புகள்
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.
எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.
அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
செரிமான பிரச்சனை
மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.
இரத்த அழுத்தம்
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
பளிச் பற்கள்
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
அழகான சருமம்
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
|
சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்
| சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ் |
அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.
சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.
ஆவி பிடித்தல்
தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தண்ணீர்
கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
சுத்தமான மூக்கு
தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
உப்புத் தண்ணீர்
சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.
இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.
யூகலிப்டஸ் எண்ணெய்
கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.
மூலிகைத் தேநீர்
சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.
மஞ்சள் தூள்
சளி இருக்கும் பொழுது அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
காரமான உணவுகள்
காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.
|
Wednesday, June 26, 2013
சீத்தாப்பழம்
சீத்தாப்பழம்...
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
11. இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது.
Visit our Page -► தமிழால் இணைவோம்

உலர் திராட்சை
உலர் திராட்சை
உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.
இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

Sunday, June 23, 2013
செரிமான பிரச்னைக்கு சூப்பர் டிப்ஸ்
| செரிமான பிரச்னைக்கு சூப்பர் டிப்ஸ் |
குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வெதுவெதுப்பான தண்ணீர்
உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும்.
அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.
எலுமிச்சைப் பழச்சாறு
காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவதில் விருப்பம் இல்லை என்றால் அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தலாம்.
தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை தவறாமல் அருந்தி வந்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை நீக்கி, அருமையான செரிமானத்திற்கு வழங்கும்.
மசாஜ்
செரிமானம் தங்கு தடையின்றி நடைபெற ஓய்வாக இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய் மசாஜ் செரிமானக் கேளாறை நீக்கிவிடும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.
கொழுப்புச்சத்து
செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.
வைட்டமின் சி உணவுகள்
உணவில் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, தக்காளி, கிவி பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.
மேலும் பழங்கள் மற்றும் காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் அவை மலச்சிக்கலை நீக்கி எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கும்.
இறைச்சி
அசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.
உடற்பயிற்சி
தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
தயிர்
கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத தயிரைத் தினமும் பருகி வருவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தயிர் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்குகிறது. அதோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் செரிமானப் பிரச்சனைகளையும் நீக்குகிறது.
அதிகமான உணவு
தேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால், அது செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அளவாக உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.
|
Thursday, June 20, 2013
ஆப்பிளை விட மருத்துவ குணங்கள் நிறைந்த பேரிக்காய்
| ஆப்பிளை விட மருத்துவ குணங்கள் நிறைந்த பேரிக்காய் |
பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.
எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
இதை அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும்.
மன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.
கர்ப்பிணிகளுக்கு பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் தேவையான பால் சுரக்கும்.
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் பழத் தோலில் அதிக அளவு உள்ள தாவர ஊட்டச் சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்று கிறது. இதில் வைட்டமின் சி செறிந்துள்ளது.
இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.
பேரிக்காய் ஒரு சில மாதம் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின்னர் படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு பழம் சாப்பிடக் கொடுத்தால் வளர்ச்சி பெறுவர்.
|
Monday, June 17, 2013
7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
| 7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா? |
இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
இதற்கு ஒருசில இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம்.
முகத்தை கழுவுதல்
முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும்.
எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.
ஃபேஸ் பேக்
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.
பழங்கள்
பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை.
எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சூரியக் கதிர்களின் தாக்கம்
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.
எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.
குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.
தயிர் மசாஜ்
தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.
கிளின்சிங்
கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தண்ணீர் குடிக்கவும்
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.
உடற்பயிற்சி
முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டுமெனில் மேற்கூறியவற்றுடன் தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.
|
Friday, June 14, 2013
ஜலதோஷத்தை போக்குவதற்கு இயற்கை வைத்தியங்கள்
| ஜலதோஷத்தை போக்குவதற்கு இயற்கை வைத்தியங்கள் |
ஜலதோஷம் சாதாரணமாக மூக்கில் தொடங்குகிறது. ஆனால் மெதுவாக உடல் முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இந்த ஜலதோஷம் தொடங்கியதற்கான சில அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண், குளிர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை.
இதற்கு செயற்கை மருந்துகளும் எப்போதும் முழுமையான நிவாரணம் வழங்குவதில்லை.
ஆனால் சில இயற்கை வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த முடியும்.
வரும் முன் காப்போம்
தொண்டை அடைப்பு மற்றும் ஜலதோஷம் பிடித்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்தல் வேண்டும். இதனால் உடலினுள் வைரஸ்கள் மேலும் நுழைவதை தடுக்க இயலும்.
நீராவி பிடித்தல்
நீராவி பிடித்தால் மூக்கடைப்பு மற்றும் மாரடைப்பிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். சூடான நீராவி சுவாச பாதையில் இருக்கும் கிருமிகளை கொல்லும்.
மேலும் இது மென்மையான நாசி திசுக்களை, சூடான நீராவி காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு ஸ்டீம் இன்ஹேலர் இல்லாத நிலையில், சுடு தண்ணீரை பயன்படுத்தலாம்.
ஜலதோஷம் வருவதுப் போல் தோன்றினால், நீராவி பிடித்தலால் இதனை தடுக்க இயலும். ஏற்கனவே ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஜலதோஷ வலி நிவாரணி மற்றும் ஸ்டீமரை பயன்படுத்துதல் வேண்டும்.
இஞ்சி டீ
ஆவி பறக்கும் சூடான இஞ்சி டீ குடித்தால், ஜலதோஷத்தை எளிமையாகப் போக்கலாம்.
புதினா டீ
புதினா மற்றும் துளசி இலைகள் சேர்க்கப்பட்ட டீயை ஜலதோஷத்தின் போது குடித்தால், தொண்டை மற்றும் சுவாச பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகும்.
சூடான ரசம்
புளி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் சூடான ரசம், உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேற உதவுகிறது.
மேலும் மூக்கு மற்றும் கண்களில் நீர்பெருக்கெடுப்பால், நாசி பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகின்றது.
மஞ்சள் தூள்
பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும் செய்யலாம். ஏனெனில் மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அது ஒரு பயனுள்ள தீர்வாகும்.
வைட்டமின் சி
வைட்டமின் சி, ஒரு தொற்று எதிர்ப்பு மருந்தாகும், ஜலதோஷத்திற்கு நன்கு அறியப்பட்ட மருந்தாக உள்ளது. எனவே ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து குடிப்பதால், உடலுக்கு எதிப்பு சக்தியானது அதிகரிக்கும்.
துளசி இலைகள்
குழந்தைகளுக்கு மூக்கு அடைத்திருந்தால், தேனுடன் துளசி இலை சாற்றை கலந்து ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். பெரியவர்கள் துளசி இலையை மென்று சாப்பிடலாம்.
|
Thursday, June 13, 2013
கத்தரிக்காயின் பயன்கள்
| கத்தரிக்காயின் பயன்கள் |
இக் கத்தரிக்காய் எமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைகின்றது என்பதனை நாம் பார்ப்போம்..!
* 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.
* அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.
* "பி" காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
* கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கு மிகவும் உகந்தவை.
|
உங்கள் முகத்தில் கரும்புள்ளி தொல்லையா?
| உங்கள் முகத்தில் கரும்புள்ளி தொல்லையா? |
* ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.
* வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.
* வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.
* உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.
* ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.
* முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.
* பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.
* வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.
* கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.
|
Wednesday, June 12, 2013
புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் முட்டைகோஸ்
| புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் முட்டைகோஸ் |
இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும்.
குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.
முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்:-
முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.
எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
|
Monday, June 10, 2013
இயற்கை சார்ந்த உணவு முறைகள்
இயற்கை சார்ந்த உணவு முறைகள்
தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,
1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrates )
3. கொழுப்பு ( Fats )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )
ஆகியன ஆகும்.
இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.
இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.
• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீ ரில் உள்ள அமிலேஸ் ( AAmylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.
• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.
• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.
• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.
• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.
• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.
மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,
1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :
உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.
இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித ்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.
2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :
புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.
முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.
3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :
வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.
மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.
ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )
இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.
சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.
இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.
இயற்கை சார்ந்த உணவு முறைகள் :
1. உணவின் குணமறிந்து உண்ணல் :
வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.
2. காலமறிந்து உண்ணல் :
தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.
• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.
• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.
• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.
இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,
“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.
இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.
இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.
இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.
எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
3. பசித்து புசித்தல் :
“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.
மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).
4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :
நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).
மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).
5. நொறுங்கத் தின்றல் :
உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.
6. சரியான உணவு வகைகள் :
காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.
மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.
ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.
மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.
சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.
மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்ற ுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.
ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.
தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,
1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrates )
3. கொழுப்பு ( Fats )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )
ஆகியன ஆகும்.
இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.
இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.
• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீ
• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.
• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.
• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.
• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.
• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.
மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,
1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :
உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.
இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித
2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :
புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.
முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.
3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :
வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.
மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.
ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )
இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.
சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.
இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.
இயற்கை சார்ந்த உணவு முறைகள் :
1. உணவின் குணமறிந்து உண்ணல் :
வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.
2. காலமறிந்து உண்ணல் :
தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.
• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.
• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.
• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.
இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,
“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.
இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.
இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.
இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.
எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
3. பசித்து புசித்தல் :
“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.
மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).
4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :
நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).
மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).
5. நொறுங்கத் தின்றல் :
உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.
6. சரியான உணவு வகைகள் :
காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.
மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.
ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.
மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.
சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.
மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்ற
ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.
Saturday, June 8, 2013
மீன் சாப்பிட்டால் குழந்தைகளை அலர்ஜி நோய் அணுகாது
| மீன் சாப்பிட்டால் குழந்தைகளை அலர்ஜி நோய் அணுகாது: ஆராய்ச்சியில் தகவல் |
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர்.
இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன.
அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
சிலபேருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும்.
மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர்.
இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்பவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.
|
Friday, June 7, 2013
வேர்க்கடலை!
வேர்க்கடலை!
வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது .
காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீஷியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.
இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது ,மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பெருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் ஏனெனில் அதில்தான் நிறையச் சத்துகள் அடங்கியுள்ளது.மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது.
ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது.இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது
வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது.வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.
அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது.இதில் முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சிறு நீராக கோளாறு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கடலையை தவிர்த்துவிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில ் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள். வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.
மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.
கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது .
காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக
வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.
இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது ,மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பெருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் ஏனெனில் அதில்தான் நிறையச் சத்துகள் அடங்கியுள்ளது.மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது.
ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது.இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது
வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவுகிறது.வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.
அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது.இதில் முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சிறு நீராக கோளாறு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கடலையை தவிர்த்துவிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில
மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.
கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா ?
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?வேர்க்கடலையைப்
Monday, June 3, 2013
இளமையைக் கூட்டும் இளநீர்
| இளமையைக் கூட்டும் இளநீர் |
இளநீரில் இருக்கும் இனிப்பான விஷயங்கள் யாதெனில், ''இளநீர், நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.
பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன், ஃபோலேட் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் அதிகம். 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.
இளநீரின் மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். கல்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.
முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
இதில் உள்ள செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும். இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும் அற்புத காயகல்பம். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.
இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம். தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால். வாழ்நாள் முழுவதும் தெம்புடனும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்.
|
ஒமேகா-3 - நீண்ட இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்குமான ஊட்டச்சத்து
| நீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்குமான சிறந்த ஊட்டச்சத்து உணவுகள் |
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்பது ஒரு வகை கொழுப்பு. கொழுப்பு என்றதும் எப்படி இதனை சாப்பிடக்கூடும் என்று கேட்கலாம். பொதுவாக கொழுப்புக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு.
கெட்ட கொழுப்பானது இதயத் தமனிகளில் தங்கிவிடும். ஆனால் நல்ல கொழுப்பானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு கொழுப்பாகும்.
எப்படியெனில் இவை, தமனிகளில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயை மென்மையாக எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.
எனவே தான், ஆரோக்கியத்தைப் பற்றிய பல செய்திகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு மட்டுமின்றி, முதுமையைத் தள்ளி போடுதல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பெரும்பாலும், இந்த சத்து மீன்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும், சைவ உணவாளர்கள் எப்படி இதனை சாப்பிடுவார்கள் என்பதால், சைவம் மற்றும் அசைவ உணவாளர்களுக்கு ஏற்றவாறு இந்த சத்து நிறைந்த சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.
மீன்
பொதுவாக அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கும். ஆனால் சால்மன் மற்றும் சூரை மீனில், இந்த சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
ஆளி விதை
சைவ உணவாளர்களுக்கு ஆளி விதை சரியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவாக இருக்கும். மேலும் இதில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான EPA மற்றம் DHA என்னும் ஃபேட்டி ஆசிட்டுகளும் உள்ளன.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் அதிகமான அளவில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இருப்பினும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், விர்ஜின் அல்லது பதப்படுத்தபடாத ஆலிவ் ஆயிலில் தான் நல்ல அளவில் உள்ளது.
வால்நட்
வால்நட்டில் இரண்டு வகையான முக்கிய சத்துக்கள் வளமாக உள்ளன. அவை வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். எனவே இதனை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தில் விரைவில் தோன்றும் முதுமைத் தன்மையும் தள்ளிப் போகும்.
முட்டை
முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. முட்டையைப் பற்றிய ஒரு கட்டுக்கதையில் முட்டை இதயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நல்ல கொலஸ்ட்ரால் முட்டையில் உள்ளது. எனவே இது இதயத்திற்கு நல்ல ஒரு உணவே.
ஆட்டு இறைச்சி
புற்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே புற்களை அதிகம் சாப்பிடும் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டால், அதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபேட்டி ஆசிட்டுகளை பெறலாம்.
கனோலா ஆயில்
ரேப்சீடு எண்ணெயை பதப்படுத்தப்பட்டு கிடைப்பது தான் கனோலா ஆயில். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களில் முக்கியமானது. ஏனெனில் இதில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக உள்ளது.
கடல் உணவுகள்
கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அவகேடோ
அவகேடோவில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், இதன் ஒரு பழத்தில் மட்டும் 250 மில்லிகிராம் நல்ல கொலஸ்ட்ராலை பெறலாம்.
பூசணிக்காய் விதைகள்
ஆளி விதைக்கு அடுத்தப்படியாக நல்ல அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பது, பூசணிக்காய விதைகளில் தான்.
|
ஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா?
ஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா?
உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? கவலையே விடுங்க கிழே உள்ள குறிப்புகளை படிங்கள்
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
Subscribe to:
Comments (Atom)