| ஆச்சரியம் தரும் நெய்யின் மகத்துவம் |
எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
![]()
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம். மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.
மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.
|
Sunday, December 29, 2013
ஆச்சரியம் தரும் நெய்யின் மகத்துவம்
Wednesday, December 4, 2013
பிஸ்தாவின் எண்ணற்ற மகத்துவங்கள்
| பிஸ்தாவின் எண்ணற்ற மகத்துவங்கள் |
இது இயல்பாக ஒரு பழமாகும், ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.
உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன.
உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.
ஆரோக்கியமான இதயம்
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.
இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.
![]()
நீரிழிவு நோயை தடுக்கின்றது
பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.
![]()
இரத்தத்திற்கு ஏற்றது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது.
இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.
![]()
ஆரோக்கியமான மூளை
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.
![]()
ஆரோக்கியமான சருமம்
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எப்படியெனில் இதனை சாப்பிட்டால், இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது.
இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது.
![]()
புற்றுநோய்
இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.
![]()
ஆரோக்கியமான பார்வை
பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும்.
![]()
வலுவான கூந்தல்
பிஸ்தாவை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்களால் மயிர் கால்களை வலுப்படுத்தப்பட்டு, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது.
![]() |
Wednesday, November 27, 2013
கொழுப்பை கரைக்கும் பீட்ரூட்
| கொழுப்பை கரைக்கும் பீட்ரூட் |
காய், கீரை, ஜூஸ் என பீட்ரூடின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை.
பீட்ரூட் என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
நைட்ரேட்டுகளின் தலை சிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது.
இவ்விரண்டு கூறுகளும் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.
![]()
கெட்ட கொழுப்பைக் குறைக்கும்
கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் போன்றவை மிகுந்து காணப்படுகிறது.
பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.
![]()
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது
பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும்.
ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக் குழந்தையைப் பாதுகாக்க வல்லது.
அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம்.
மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.
![]()
பாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும்
"இயற்கையான வயாக்ரா'' என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன.
மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும்.
![]()
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது.
வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று நோய் செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.
![]() |
Saturday, November 23, 2013
முளைக்கட்டிய தானியங்களின் மகத்துவங்கள்
| முளைக்கட்டிய தானியங்களின் மகத்துவங்கள் |
பருப்புகள், விதைகள், தானியங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் முளை கட்டி விடலாம்.
முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்படுகின்றன.
பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் வெளிப்படுகின்றன.
முழுமையான ஊட்டச்சத்துக்களை குறைவாகவும், எளிதாகவும் அடைய மிகவும் ஏற்றவையாக இருப்பவை முளைக்கட்டப்பட்ட தானியங்களே.
என்சைம்கள்
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிகளவு என்ஸைம்கள் முளைக்கட்டப்பட்ட தானியங்களில் உள்ளன என்று ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான தானியங்களில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.
![]()
அதிக புரதச்சத்து
பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களில் உள்ள புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவை முறை கட்டப்பட்ட பின்னர் மேலும் அதிகரிக்கின்றன.
முளை கட்டிய தானியங்களில் உள்ள சில அமினோ அமிலங்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டமளிக்கின்றன.
![]()
அதிகமான நார்ச்சத்து
எடையைக் குறைக்கவும், செறிமாணத்தை சீராக்கவும் உதவும் நார்ச்சத்துக்களை முளை கட்டுவதால் அதிகரிக்க முடியும்.
உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.
![]()
வைட்டமின்கள்
முளை கட்டுவதால் வைட்டமின்களின் அளவு மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.
முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
![]()
அமினோ அமிலங்கள்
தொடர்ந்து சரிவிகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால், கொழுப்பை எரிக்கக் கூடிய அமினோ அமிலங்கள் போதிய அளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர் கொள்ளும் உடல் ரீதியான பிரச்னையாகும்.
முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்ளை போதிய அளவில் சுரக்கச் செய்ய முடியும்.
![]()
பல்வகைப் பயன்பாடுகள்
முளை கட்டிய தானியங்களை எந்த வகையிலும் சாப்பிட முடியும்.
பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட சாப்பிட முடியும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாகவும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவாகவும் முளை கட்டிய தானியங்கள் உள்ளன.
|
Tuesday, November 19, 2013
கொழுப்பை கரைக்கும் கொள்ளு
| கொழுப்பை கரைக்கும் கொள்ளு |
புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் “Horsegram” என்று அழைக்கப்படுகிறது.
இதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது.
ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைப்பதுடன், சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது.
கொள்ளின் பலன்கள்
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம், உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.
கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.
வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த, அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.
![]()
சூட்டைக் கிளப்புமா?
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு.
கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது.
கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது, மனிதர்களுக்கும் அப்படித்தான்.
எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம்.
வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம்.
கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.
உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும்.
அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம் ஏனெனில் மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.
![]() ![]() ![]() |
Wednesday, November 13, 2013
உயிருக்கு உலைவைக்கும் உணவுகள் இவை தானாம்!...மக்களே எச்சரிக்கையா இருங்க
| உயிருக்கு உலைவைக்கும் உணவுகள் இவை தானாம்!...மக்களே எச்சரிக்கையா இருங்க |
ஏனெனில் சில உணவுகள் உயிர் போகும் அளவிலான தீமையை கூட விளைவிக்கலாம்.
எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது.
ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே அந்த உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்.
குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு
பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.
மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும்.
அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.
![]()
ஆப்பிள்
என்ன அதிர்ச்சியாக உள்ளதா? தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.
![]()
ருபார்ப்
இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும்.
பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.
![]()
செர்ரி
பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.
![]()
பாதாம்
பாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், பலரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம்.
ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.
![]()
பஃப்பர் மீன்(Puffer Fish)
மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படின்னா பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.
ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
![]()
காளான்
காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன.
அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது.
ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள், இல்லாவிட்டால் உயிரை விட நேரிடும்.
![]() |
Tuesday, November 12, 2013
Minerals and Their Functions and Sources
Minerals and Their Functions and Sources
The body needs many minerals; these are called essential minerals. Essential minerals are sometimes divided up into major minerals (macrominerals) and trace minerals (microminerals). These two groups of minerals are equally important, but trace minerals are needed in smaller amounts than major minerals. The amounts needed in the body are not an indication of their importance.
A balanced diet usually provides all of the essential minerals. The two tables below list minerals, what they do in the body (their functions), and their sources in food.
| Mineral | Function | Sources |
|---|---|---|
Sodium
|
Needed for proper fluid balance, nerve transmission, and muscle contraction
|
Table salt, soy sauce; large amounts in processed foods; small amounts in milk, breads, vegetables, and unprocessed meats
|
Chloride
|
Needed for proper fluid balance, stomach acid
|
Table salt, soy sauce; large amounts in processed foods; small amounts in milk, meats, breads, and vegetables
|
Potassium
|
Needed for proper fluid balance, nerve transmission, and muscle contraction
|
Meats, milk, fresh fruits and vegetables, whole grains, legumes
|
Calcium
|
Important for healthy bones and teeth; helps muscles relax and contract; important in nerve functioning, blood clotting, blood pressure regulation, immune system health
|
Milk and milk products; canned fish with bones (salmon, sardines); fortified tofu and fortified soy milk; greens (broccoli, mustard greens); legumes
|
Phosphorus
|
Important for healthy bones and teeth; found in every cell; part of the system that maintains acid-base balance
|
Meat, fish, poultry, eggs, milk, processed foods (including soda pop)
|
Magnesium
|
Found in bones; needed for making protein, muscle contraction, nerve transmission, immune system health
|
Nuts and seeds; legumes; leafy, green vegetables; seafood; chocolate; artichokes; "hard" drinking water
|
Sulfur
|
Found in protein molecules
|
Occurs in foods as part of protein: meats, poultry, fish, eggs, milk, legumes, nuts
|
Trace minerals (microminerals)
The body needs trace minerals in very small amounts. Note that iron is considered to be a trace mineral, although the amount needed is somewhat more than for other microminerals.
| Mineral | Function | Sources |
|---|---|---|
Iron
|
Part of a molecule (hemoglobin) found in red blood cells that carries oxygen in the body; needed for energy metabolism
|
Organ meats; red meats; fish; poultry; shellfish (especially clams); egg yolks; legumes; dried fruits; dark, leafy greens; iron-enriched breads and cereals; and fortified cereals
|
Zinc
|
Part of many enzymes; needed for making protein and genetic material; has a function in taste perception, wound healing, normal fetal development, production of sperm, normal growth and sexual maturation, immune system health
|
Meats, fish, poultry, leavened whole grains, vegetables
|
Iodine
|
Found in thyroid hormone, which helps regulate growth, development, and metabolism
|
Seafood, foods grown in iodine-rich soil, iodized salt, bread, dairy products
|
Selenium
|
Meats, seafood, grains
| |
Copper
|
Part of many enzymes; needed for iron metabolism
|
Legumes, nuts and seeds, whole grains, organ meats, drinking water
|
Manganese
|
Part of many enzymes
|
Widespread in foods, especially plant foods
|
Fluoride
|
Involved in formation of bones and teeth; helps prevent tooth decay
|
Drinking water (either fluoridated or naturally containing fluoride), fish, and most teas
|
Chromium
|
Unrefined foods, especially liver, brewer's yeast, whole grains, nuts, cheeses
| |
Molybdenum
|
Part of some enzymes
|
Legumes; breads and grains; leafy greens; leafy, green vegetables; milk; liver
|
Other trace nutrients known to be essential in tiny amounts include nickel, silicon, vanadium, and cobalt.
பளபளவென ஜொலிக்க வேண்டுமா? நெல்லிக்காய்
| பளபளவென ஜொலிக்க வேண்டுமா? |
ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான்.
ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம்.
ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
முதுமையை தடுக்கும்
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, இளமையுடன் காட்சியளிக்கும்.
குறிப்பாக மிருதுவான, பொலிவுடன் கூடிய சருமத்தை பெறலாம்.
கருமை திட்டுக்கள்
ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.
அழகான உடல் வடிவம்
அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும்.
இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
|
Sunday, October 27, 2013
மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்
| மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள் |
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன.
உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.
அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
மஞ்சள் பால் செய்முறை:
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.
சுவாசக் கோளாறு
மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும்.
இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.
அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
புற்றுநோய்
மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால் இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.
தூக்கமின்மை
வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.
ஜலதோஷம் மற்றும் இருமல்
மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம் அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
கீல்வாதம்
மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.
மேலும் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
மஞ்சள் பால் ஆயூர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது.
இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.
மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது.
கல்லீரல் நச்சு நீக்கி
மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது.
இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால் இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.
எலும்பு சுகாதாரம்
மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.
செரிமான நலம்
இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.
எடை குறைப்பு
மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
எக்ஸிமா/சிரங்கு
எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.
|
Tuesday, October 15, 2013
கருப்பு மிளகின் மகத்துவங்கள்
| கருப்பு மிளகின் மகத்துவங்கள் |
ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம்.
பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும், சில பெரியவர்களுக்கும் அப்படி தான்.
புற்றுநோயை தடுக்கும்
மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது என்று மிஷிகன் கேன்சர் மைய பல்கலைகழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளது.
மேலும் இதனை மஞ்சளுடன் கலக்கும் போது, அதன் புற்று எதிர்ப்பு குணங்கள் இன்னமும் அதிகரிக்கும்.
பப்பெரைன்னை தவிர கருப்பு மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ப்ளேவோனாய்டுகள், கரோடீன்கள் மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது.
இவைகள் தீமையை விளைவிக்கும் இயக்க உறுப்புகளை நீக்கி, உடலை புற்றுநோய் மற்றும் இதர நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
சரும புற்று மற்றும் குடல் புற்று வளர்வதை தடுப்பதிலும் கூட இது பெரிதும் உதவுகிறது என்று வேறு சில ஆய்வுகள் கூறுகிறது.
எனவே உணவுகளில் தினமும் ஒரு டீஸ்பூன் மிளகு பொடியை சேர்த்திடுங்கள். சமைக்கும் போது அதனை உணவில் சேர்ப்பதை விட, அதை அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.
செரிமானத்திற்கு உதவும்
கருப்பு மிளகில் உள்ள பப்பெரைன் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும். வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகமாக சுரக்க தூண்டுகோலாக விளங்குகிறது கருப்பு மிளகு.
இந்த அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவுகள் செரிமானமாக உதவும். இந்த உணவு வகைகள் சரிவர செரிமானமாகாமல் போனால் வயிற்றுப் பொருமல், செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும்.
அதிகப்படியாக உற்பத்தியாகும் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கும். செரிமானத்தை சீராக்க, சமைக்கும் போது உணவில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். அது சுவையை கூட்டுவதுடன், வயிற்றையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உடல் எடை குறைய உதவும்
கருப்பு மிளகு உணவை செரிக்க(ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல்) வைப்பதிலும் பெரிதும் உதவும். மேலும் அதன் வெளிப்புறத்தில் உள்ள ஆற்றல் மிக்க பைட்டோ-நியூட்ரியன்ட் ஊக்கி கொழுப்பு அணுக்களை உடைத்தெறியும்.
இது வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க உதவும். இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுவதால், உடலில் இருந்து நச்சுப் பொருட்களும் வெளியேறும். இவையனைத்தும் கூட்டாக சேர்ந்து, உடல் எடை குறைய துணை புரியும்.
ஆகவே உடல் எடை குறைய தினமும் உண்ணும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி கொள்ளுங்கள். அதிகப்படியாக அதை சேர்க்கக்கூடாது. அது வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
வாயு பிரச்சனை நீங்கும்
வாயு உருவாகுவதை தடுக்கும் பொருளான கார்மிநேடிவ் கருப்பு மிளகில் உள்ளதால் வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
எனவே உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகை சேர்த்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
சருமத்தை தூய்மையாக்கும்
உடலில் இருந்து வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற கருப்பு மிளகு உதவுவதோடு நிற்காமல், அழுக்கு நீக்கியாகவும் உதவுகிறது.
மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும்.
மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
அடைத்த மூக்கை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்
கருப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அது பெரிதும் உதவும். கதகதப்புடன் காரசாரமாக இருப்பதால், சளியை நீக்கி அடைபட்டிருக்கும் மூக்கிற்கு நிவாரணியாக விளங்கும்.
அதற்கு அரைத்த மிளகை ரசம் அல்லது சூப்பில் சேர்த்து குடியுங்கள். இது உடனடியாக சளியை நீக்கி சுலபமாக மூச்சு விட செய்யும்.
பசியின்மையை போக்கும்
கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி சுவை அரும்புகளை ஊக்குவிப்பதை அறிவோம். இந்த குணத்தால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு ஒரு இயற்கை மருந்தாக விளங்குகிறது.
உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் போதும். அது பசியின்மை பிரச்சனையை நீக்கும்.
ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்த உதவும்
உடலில் உள்ள மருந்து இருப்பை அதிகரிக்க கருப்பு மிளகின் குணங்கள் உதவுகிறது. அப்படியென்றால் உணவில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களை உடலில் சரியாக பயணிக்க செய்து ஈர்த்துக் கொள்ள உதவும்.
இந்த குணம் மருந்து சரியாக வேலை செய்யவும் துணை நிற்கும்.
|
Saturday, October 12, 2013
50 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்
வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6. வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
Friday, October 11, 2013
உடல் எடையை குறைக்கும் தயிர் - எப்படி?
உடல் எடையை குறைக்கும் தயிர் - எப்படி?
தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.
தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.
மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.
இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கையில், குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்து கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22 சதவிகித அளவுக்கு உடல் எடை குறைந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளித்தனர்.
Monday, October 7, 2013
அழகான கன்னங்கள் வேண்டுமா?
| அழகான கன்னங்கள் வேண்டுமா? |
ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
சொல்லப்போனால் இத்தகைய கன்னங்கள் ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற பழக்கங்களான குடிப்பழக்கம், போதிய தூக்கமின்மை, புகைப்பிடித்தல் மற்றும் நொறுக்குத்தீனிகள் அதிகம் உட்கொள்வது போன்றவை காரணங்களாகின்றன.
மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உடலுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடையை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஆகவே கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின்பற்றி வந்தால் நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம்.
அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் உதவும்.
வாயை குவிக்கவும்
கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் வாயை குவித்தல்.
அவ்வாறு உதடுகளை இறுக்கமாக மூடி 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.
சிரிப்பு
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.
![]()
கன்னங்களை தூக்குதல்
நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.
![]()
மீன் போன்ற உதடு
படத்தில் காட்டியவாறு மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம்.
![]()
வாயில் காற்றை நிரப்புங்கள்
படத்தில் காட்டிய படி வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு சரியான அளவில் இருக்கும்.
|
Sunday, September 29, 2013
தொப்பை குறைய எளிய பயிற்சி
| தொப்பை குறைய எளிய பயிற்சி |
இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.
கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும். பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
|
Saturday, September 28, 2013
இயற்கையான உடல் அழகைப் பெற உதவும் பாட்டி குறிப்புகள்
| இயற்கையான உடல் அழகைப் பெற உதவும் பாட்டி குறிப்புகள் |
அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.
அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான்.
ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே.
ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது.
மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர்.
ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிசொன்ன அழகுக் குறிப்புகளை பார்ப்போம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள்.
எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.
முகத்தை கழுவுதல்
முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
ஆவிப் பிடித்தல்
ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள்.
எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
பழங்கள்
கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக பழங்களை வைத்து மாஸ்க் போட்டால் அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.
அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
முடி மசாஜ்
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
தயிர்
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால் கூந்தல் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
சூப்பர் மாய்ஸ்சுரைசர்
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால் சருமம் மென்மையாக ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி இருக்கும்.
எலுமிச்சை
பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான்.
ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.
நெய்
உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல் சிறிது நெய்யை தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கடுகு எண்ணெய்
கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக தினமும் காலையில் எழுந்ததும் கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கைகள் மென்மையாக முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.
|
Thursday, September 26, 2013
வயிற்று வலி குணமாக எளியவழி
| வயிற்று வலி குணமாக எளியவழி |
அது எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும் இந்த எளிய மருந்து குணப்படுத்தும்.
அரை தேக்கரண்டி சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் இருபது நிமிடத்தில் வயிற்று வலி குணமாகும்.
|
Thursday, September 19, 2013
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பாகற்காய்
| நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பாகற்காய் |
பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.
பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.
ஒரு பிடி கொடுப்பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். அதே இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை தொடர்ந்து ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்தலாம்.
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
|
Sunday, September 15, 2013
மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்
இன்றைய அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம்.
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
இன்றைய அவசர உலகில் நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைக் காண்போம்.
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Subscribe to:
Comments (Atom)

































