Friday, April 27, 2012

ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் மக‌த்துவ‌ம்

நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைக்கிறது.

நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இரு‌க்க வே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது.

ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் கு‌ளி‌ர்‌ச்‌சியை‌த் தருவதோடு ‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம் உடலு‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது. 

வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌சி‌றிது ந‌ல்லெ‌ண்ணெ‌ய் குடி‌ப்பது குடலு‌க்கு‌ ந‌ல்லது.


உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.

ஆரோக்கியமான வாழ்விற்கு


ஆரோக்கியமான வாழ்விற்கு

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது.
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம். குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.
உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

Wednesday, April 11, 2012

என்றும் இளமையாக இருக்க


என்றும் இளமையாக இருக்க

வயதான காலத்திலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவு வேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர் இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதைமாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம் மேம்பட இது அவசியம்.
2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.
3. கார்போஹைட்ரேட்(50%), புரதம்(30%), கொழுப்பு(15%), வைட்டமின்கள், தாது உப்புகள்(5%) இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.
4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.
5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.
6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.
7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தண்ணீர் குடிக்கலாம்.
8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும் என்பது தவறான கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.
9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.
10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.
11. தவிர்க்க முடியா விட்டால் வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது. இரவில் அசைவம் வேண்டாம்.
12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.
13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.
14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல் 3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.
15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.
16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.
17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.
18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.
19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.
20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.

முருங்கையின் மருத்துவ குணங்கள்


முருங்கையின் மருத்துவ குணங்கள்

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.
முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.
தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது, புரதம் - 6.7%, கொழுப்பு - 1.7%, தாதுக்கள் - 2.3% மற்றும் கார்போஹைட்ரேட்கள் - 12.5%.

Friday, April 6, 2012

உடலில் தழும்புகள் மறைவதற்கு


உடலில் தழும்புகள் மறைவதற்கு

ஒருசிலருக்கு பிறக்கும் போதே முகத்திலும், உடலிலும் தழும்புகள், மச்சம், மரு போன்றவை இருக்கும்.
சிலருக்கு சின்னதாய் அழகாய் இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கை முறையிலேயே இந்த தழும்பை போக்க ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய்க்கு சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. இது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினசரி 10 நிமிடங்கள் தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். தழும்பு படிப்படியாக மறையும். சருமம் மென்மையாகும்.
ஐஸ் கட்டி ஒத்தடம்: ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் கட்டி தழும்பு உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் இறுக்கமாக உள்ள தசைகள் இளகி மென்மையாகும். ஐஸ் கியூப் கொண்டு தழும்பு உள்ள இடத்தில் மென்மையாக 5 நிமிடங்கள் தேய்க்கலாம் இதனால் தழும்புகள் நிறம் மாறும்.
வைட்டமின் இ: சருமத்தில் எந்த பகுதியில் காயமோ, தழும்போ ஏற்பட்டால் வைட்டமின் இ சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
வைட்டமின் இ அடங்கிய ஆரஞ்ச் ஆயில் பயன்படுத்தி உடம்பில் தழும்பு உள்ள இடத்தில் தேய்க்கலாம். அதேபோல் வைட்டமின் இ அடங்கிய உணவுகளை உண்பதன் மூலம் பிறப்புத் தழும்புகள் படிப்படியாக நிறம் மாறுவதோடு மறைந்துவிடும்.
ஏ,சி, வைட்டமின்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியவை தழும்புகளை போக்குவதில் சிறந்த துணைபுரிகின்றன. கிவி, ஆப்ரிகாட் பழங்களின் சதைகளை எடுத்து மசித்து ஆரஞ்சு பழச் சாறுடன் சேர்த்து தழும்பு உள்ள பகுதிகளில் தேய்க்கவும். இது தழும்புகளை இயற்கையாகவே மறையச் செய்யும்.
எலுமிச்சை, தக்காளி சாறு: எலுமிச்சை சிறந்த இயற்கை பிளீச்சாக செயல்படுகிறது. எலுமிச்சை சாற்றினை தழும்பு உள்ள பகுதியில் நன்கு தேய்த்து ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ தழும்பு நிறம் மாறும்.
தக்காளிச் சாறு எடுத்து அதனை தழும்பு உள்ள பகுதியில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும்.
இதனை வாரம் மூன்று முறை செய்துவர பலன் தெரியும். தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் தழும்பு உள்ள பகுதியில் வினைபுரிந்து தழும்புகளை மறையச் செய்கிறது.
ரசாயன கலப்பு உள்ள விலை அதிகமான பொருட்களை உபயோகித்து தழும்புகளை மாற்ற முயற்சி செய்வதை விட இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக தழும்புகளை குணப்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.